வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

இப்படி நடக்கும்னு தெரிஞ்சிருந்தா ரஜினி படத்தில நடிச்சிருக்கவே மாட்டேன்.. குஷ்பூ வருத்தம்

பொதுவாகவே ஒரு படம் ஹிட்டாகி இருந்தால் அப்படத்தைப் பற்றி அப்படத்தில் நடித்தவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வந்து எல்லா மீடியாவிலும் கூறுவர். அதுவே தோல்விப்படம் என்றால், அப்படத்தைப் பற்றி வெளியில் கூற தயக்கப்படுவர். இந்த நிலையில் நடிகை குஷ்பு ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்தது பற்றி பகிர்ந்துள்ளார்.

அப்படி சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் அண்ணாத்த. இப்படத்தில் ரனியுடன் இணைந்து, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, நயன் தாரா, அஞ்சலி நாயர், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

ரஜினி படத்துல நடிச்சிருக்கவே மாட்டேன் – குஷ்பூ

இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார். சன்பிக்சர்ஸ் இப்படத்தை பிரமாண்டமாகத் தயாரித்திருந்தது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வந்தன. இந்த நிலையில் இப்படத்தில் அண்ணாத்த படத்தில் அப்படி நடக்கும் என தெரிந்திருந்தால் நான் நடித்திருக்கவே மாட்டேன் என குஷ்பூ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது;இப்படத்தின் கதையை இயக்குனர் சிவா கூறியபோது, மீனாவும் நானும் முக்கிய ரோலில் இருப்பதாவும் இதில் ரஜினிக்கு ஜோடி கிடையாது என்றுதான் கூறினார். இப்பட ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும் போதுதான், இப்படத்தில் ரஜினிக்கு கதாநாயகியாக நயன்தாரா உள்ளே வந்தார்.

இப்படத்தின் கதை மாறிய நிலையில், இப்படத்தின் இடைவேளை வரைதான் நானும் மீனாவும் படத்தில் வந்தோம். ரஜினி தன் தங்கைத் தேடிக் கொண்டு மும்பை செல்லும்போது நானும் மீனாவும் செல்வோம். ஆனால் இந்த கேரக்டர்கள் எதற்கு என ரசிகர்கள் கேள்வி எழுப்பியாதாகவும் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாமலை, மன்னன், பாண்டியன் ஐபிஎஸ் உள்ளிட்ட பல படங்களில் குஷ்பு நடித்திருந்த போதிலும் அண்ணாத்த படம் கலவையான விமர்சனம் பெற்றதால்தான் அவர் இப்படத்தை விமர்சித்திருப்பதாகவும், தனக்கு முக்கியத்துவம் இல்லாத கேரக்டரை இயக்குனர் கொடுத்ததால்தான் விமர்சித்திருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News