Tamil Nadu | தமிழ் நாடு
முதல்வருக்கு வேண்டுகோள் வைத்த ஆர்த்தி- ஒரு புறம் பாராட்டு மறுபுறம் திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்
மு.க. ஸ்டாலின் முதலவர் ஆனவுடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி முதல்கட்டமாக ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.
இந்நிலையில் சின்ன திரை நடிகை ஆர்த்தி பதிவிட்ட ட்வீட் பலரது கவனத்தை பெற்றுள்ளது. இது பற்றி பின்வருமாறு பதிவிட்டுள்ளார் “ரேசன் கடைகளால் 3வது அலை வந்துவிடுமோ என்ற அச்சம் வருகிறது…அரசு அரிசி அட்டையாளர்களின் Accountல் பணம் செலுத்தலாமே, கூட்டத்தை தவிர்க்கலாமே, கடுமையான வெயிலில் பெரும்பாலும் வயதானவர்களே காத்துக்கிடக்கின்றனர். பரிசீலித்துப் பாருங்களேன் @CMOTamilnadu @mkstalin #COVIDEmergency #காரோண” என பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்த டீவீட்டுக்கு சிலரோ, சரியாக சொன்னீர்கள் என பாராட்டினார்.
ஆனால் வங்கியில் செலுத்தினால் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று சொல்லி ஆயிரம் ரூபாயை புடுங்கிவிடுவார்களே, மக்கள் மறுபடியும் ஏடிஎம் வாசலில் நிற்க வேண்டுமா?., ஒரு நாளைக்கு 200 ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே நிதி வழங்கப்படுகிறது. அதனால் எந்த ரேஷன் கடையிலும் கூட்டம் இல்லை எனவும் கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளது.

tweet
கும்பமேளாவில் கூடாத கூட்டம் தான் ரேஷன் கடைகளில் கூடி மூன்றாவது அலைக்கு காரணமாகிவிடப் போகுதாக்கும், அட போங்க மேடம். உடனடியா காசு கைல கிடைக்கிறது நல்ல உதவியா தான் இருக்கு எங்களுக்கு.
