Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித் செய்த செயலால் வாயடைத்துப் போன H.வினோத்.. தல வேற லெவல்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருபவர் தல அஜித். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்று வருகின்றனர். அந்த வகையில் 2019ஆம் ஆண்டு விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலித்தது.
தற்போது தல அஜித் இரண்டாவது முறையாக வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பின் போது ஒரு சுவாரசியமான நிகழ்வு நடந்ததை தனது நண்பர்கள் வட்டத்தில் கூறி தல அஜித் பற்றி பெருமை அடைந்துள்ளார் வினோத்.
அதாவது தல அஜித் தங்கியிருந்த விடுதியில் தொலைபேசி சரி செய்ய வந்த நபர், ரிப்பேர் செய்து விட்டு தல அஜித்திடம் டிப்ஸ் கேட்டுள்ளார். அதற்கு தல அஜித் உனக்குத்தான் சம்பளம் தருகிறார்களே, பிறகு ஏன் அதிகமாக பணம் கேட்கிறாய் என புத்திமதி சொல்லி அனுப்பி விட்டார்.
பிறகு வினோத்திடம் அவரின் குடும்பத்தை பற்றி விசாரிக்க சொல்லியுள்ளார். இரண்டு பெண் பிள்ளைகளைப் பெற்ற அவர் தனது பிள்ளைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியாமல் திணறி வந்தது தெரியவந்துள்ளது. இதனால் உடனடியாக தல அஜித், அந்த நபருக்கு பீஸ் கட்ட பணம் கொடுத்து உதவியுள்ளார்.
இதேபோல் சத்தமில்லாமல் அஜித் பல உதவிகளை செய்து வருகிறார் என தனது நண்பர்கள் வட்டாரத்தில் தல அஜித் பற்றி பெருமையாக பேசி உள்ளார் வினோத்.
