India | இந்தியா
ஆண்டாளை அவமதித்த வைரமுத்துவிற்கு ஆயுள் முழுவதும் அவமானம் தொடரும் – ஹெச் ராஜா
சென்னை: ஆண்டாள் நாச்சியாரை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் அவமதித்த வைரமுத்துவிற்கு ஆயுள் முழுவதும் அவமானம் தொடரும் என ஹெச் ராஜா கூறியுள்ளார்.
சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக் கழகம் கவிஞர் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம்வழங்குவதாக அறிவித்தது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த விருதை வழங்குவார் என அந்த பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் பிரபல திரைப்பட பின்னணி பாடகி சின்மயி தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் தருவதா என்று ஆவேசமாக ஒரு டுவிட் போட்டார்.
அவரது ஒற்றை டுவிட் எல்லாவற்றையும் மாற்றியது. வருவதாக சொன்ன அமைச்சர் ராஜ்நாத் சிங் வருவதை தவிர்த்தார். பட்டம் தரும் விழாவும் ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹெச் ராஜா ஆண்டாள் நாச்சியாரை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் அவமதித்த வைரமுத்துவிற்கு ஆயுள் முழுவதும் அவமானம் தொடரும். ராஜ்நாத்சிங் அவர்களின் புனிதக் கரங்களால் விருது பெறும் தகுதி metoo குற்றச்சாட்டிற்கு ஆளானவருக்குக் கிடையாது” என்று கூறியுள்ளார்.
