Politics | அரசியல்
தல அஜித்திற்கு நக்கலாக பதிலளித்த எச்.ராஜா..!
அஜித்தின் அறிக்கைக்கு எச்.ராஜா கிண்டலான பதில்
பிஜேபியின் தலைவரான தமிழிசை தல அஜித்தின் ரசிகர்கள் தனது கட்சியில் சேர்ந்ததாகும் மேடையில் குறிப்பிட்டார். இதற்காக அஜித் தனது சினிமா வாழ்க்கையில் கூட அரசியல் சாயத்தை பூசுவதற்கு நான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
அஜித் ரசிகர்களும் அதேபோல் இருக்க வேண்டும் என்றும் குடும்பத்தை நல்லபடியாக பார்த்துக் கொள்ளவேண்டும் என்றும் தெளிவான ஒரு பதிவை வெளியிட்டார்.
பிஜேபியின் தேசிய செயலாளரான எச்.ராஜா சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ளும் போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வண்ணமாக நக்கலடித்துள்ளார்.
பிஜேபி அஜித்க்கு நூல் விடுவதாக கூறப்படுவது உண்மையா என்ற கேள்விக்கு, நாங்கள் அஜித்திற்கு நூலும் விடலை கயிறும் விடலை எங்களுக்கு அது அவசியமும் இல்லை என்று கூறியுள்ளார்.
இது அஜித் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் சாயம் பூசாதீர்கள் என்று தெளிவான பதிவு அறிக்கைக்கு மொத்த அரசியல் கட்சியும் இதனை அரசியலாக மாற்றி விட்டனர் என்பதுதான் உண்மை. தற்போது திமுக அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இதற்கான ஆதரவை தெரிவித்துள்ளனர்.
