‘மெர்சல்’ திரைப்படம் குறித்து பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தொடர்ச்சியாக கூறி வரும் கருத்துகள் பெரும் சர்ச்சைகளை கிளப்பி வருகின்றன. இந்நிலையில் அவர் மீண்டும், நடிகர் விஜய் குறித்து அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் 19-ம் தேதியன்று ஹெச்.ராஜா, ‘சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய். இந்தியாவில் பள்ளி, கல்வி, மருத்துவம் ஏழைகளுக்கு இலவசம்.

mersal vijay
mersal vijay

ஜோசஃப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல்’ என்று ட்வீட் பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து ‘மெர்சல் படத்தை இணையத்தில் பார்த்தேன்’ என்று தனியார் தொலைக்காட்சியில் தெரிவித்தார்.

இது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகவே, ‘சமூக வலைதளங்களில் பரவிய காட்சிகளைத்தான் பார்த்தேன்’ என்று கூறினார்.

mersal

மேலும், பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், காங்கிரஸின் துணைத் தலைவர் ராகுல் காந்தி என பலரும் மெர்சல் குறித்து தொடர் கருத்துகளை தெரிவிக்கவே, இந்த விஷயம் இந்திய அளவில் பேசு பொருளாக மாறியது.

இந்நிலையில் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஹெச்.ராஜா, ‘உண்மை கசக்கும்’ என்று தலைப்பிட்டு விஜய்யின் வாக்காளர் அட்டைப் போன்ற ஒன்றையும் விஜய் சார்பில் முன்னர் வெளியிட்ட அறிக்கை போன்ற ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

இதற்க்கு விஜய் ரசிகர்கள் ஆவேசமாக ட்விட்டர் செய்துள்ளனர்.

சரி உங்க ஓட்டர் ஐடியும் போட்டோ போடுங்களேன். உங்க பெயரை ஏதோ ரோகித் ஷர்மான்னு சொல்றாங்க.

ஒருவர் அனுமதி இல்லாம அவங்க தகவல்களை திருட தேர்தல் ஆணையம் துணை போகுதா அப்படி என்றால் அவர்களையும் அதற்கு காரணமான ராஜாவையும் கைது செய்யணும்

ஆமா.. இவனுங்க இதுக்கு தான் ஆதார் கார்டு கேக்குறது..

என்ன தலைவரே க்ரைம் லிஸ்ட் கூடிட்டே போகும் போல.

உங்க திருட்டு வேலை நல்லாருக்கு.இதுக்குதானே உங்க bjp எல்லாத்துக்கும் ஆதார் இணைக்க சொல்லுது டேட்டா திருட்டு எவ்ளோ பெரிய குற்றம் தெரியுமா.