Videos | வீடியோக்கள்
ஆதார் கார்டு இல்லன்னா மாவோயிஸ்டா? ஜீவாவின் ஜிப்ஸி வைரல் ஸ்னேக் பீக் வீடியோ
Published on
ராஜு முருகன் பத்திரிகையாளராக இருந்து இயக்குனர் ஆனவர். குக்கூ, ஜோக்கர் என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இவரின் அடுத்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஜீவா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளரும், மிஸ் இமாச்சல் பிரதேஷ் பட்டம் வென்றவருமான நடாஷா சிங் நடித்துள்ளார். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன்.
செல்வகுமார் ஒளிப்பதிவு, எடிட்டிங் ‘அருவி’ படப்புகழ் ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா. பாடல்களை யுகபாரதி எழுதுகிறார்.
தற்போது இந்த படத்தின் ஸ்னேக் பீக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் நடிகர் ஜீவா ஆதார் கார்டு இல்லன்னா மாவோயிஸ்டா என்று கேட்டுள்ளார். இது ஒரு நிமிட வீடியோ என்றாலும் ஒரு சில அழுத்தமான அரசியல் சார்ந்த வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
