ஜிப்ஸி

ராஜு முருகன் பத்திரிகையாளராக இருந்து இயக்குனர் ஆனவர். குக்கூ, ஜோக்கர் என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இவரின் அடுத்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Gypsy FLP

ஜீவா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளரும், மிஸ் இமாச்சல் பிரதேஷ் பட்டம் வென்றவருமான நடாஷா சிங் நடிக்கிறார். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன். செல்வகுமார் ஒளிப்பதிவு, எடிட்டிங் ‘அருவி’ படப்புகழ் ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா. பாடல்களை யுகபாரதி எழுதுகிறார்.

gypsy

ரோடு ட்ராவலில் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்துள்ளது.

gypsy