ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை முதல் ஊர் மக்கள் போராட்டம் நடத்தினர். இதில் கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டது நாம் அறிந்த செய்தியே . அந்நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தி திறன் ஆண்டிற்கு 4 லட்சம் டன். இதுவே மோசமான சூழலியல் விளைவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில். மேலும் ஆண்டிற்கு 4 லட்சம் டன் தாமிர உற்பத்தி செய்யும் அளவுக்கு விரிவாக்குவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் அந்நிறுவனத்துக்கு எதிராக போராடி வரும் போராட்டக் குழுவினர்.

அதிகம் படித்தவை:  நான் தனி ஒருவன் தான் - போலீசாக ஜெயம் ரவி மிரட்டும் அடங்கமறு ட்ரைலர் !

ஜி.வி.பிரகாஷ் தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருபவர். ஜல்லிக்கட்டு, ‘நீட்’ தேர்வு, மீத்தேன் எரிவாயு என போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு  முன்பே  ஆதரவு தெரிவித்தார்.

Ban Sterlite

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பல விஷயங்களை தன் ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார்.