இன்னும், இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு, ஜி.வி.பிரகாஷை நெருங்கவே முடியாது போலிருக்கிறது; சார், அவ்வளவு பிசி.

செம, அடங்காதவன், 4ஜி, சர்வம் தல மயம், அய்ங்கரன், 100 சதவீதம் கடலை, குப்பத்து ராஜா என, ஜி.வி.,யின் கால்ஷீட் டைரி, நிரம்பி வழிகிறது. இவர் நடிப்பில், கடைசியாக வெளியான, புரூஸ்லி, கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்கள் சரியாக போகவில்லை; ஆனாலும், அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தபடி இருக்கின்றன.

‘தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்தால் தான், சினிமாவில் தாக்குப் பிடிக்க முடியும். அதனால், எனக்கேற்ற கதைகளாக தேர்வு செய்து நடிக்கிறேன். கண்டிப்பாக, இனி வரும் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறும்; ரசிகர்களின் நம்பிக்கையை பெறுவேன்’ என்கிறாராம், ஜி.வி.

bala gv prakashஅடுத்ததாக, செம படம், ரிலீசாகிறது. கல்யாண வீட்டில் நடந்த கலாட்டாக்கள் பற்றிய உண்மை சம்பவம் தான், கதையாம். ஜி.வி.,யின் வெற்றிக்கு, இந்த கதை கை கொடுக்குமா என, பார்ப்போம்.