தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு உட்பட விவசாயிகளின் பல பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் நடிகர் ஜீ.வி.பிரகாஷ். நேற்று நீட் தேர்வால் அனிதா தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி வந்ததும் ட்விட்டரில் தன் ஆதங்கத்தை பதிவு செய்தார்.

அதோடு நிறுத்திக்கொள்ளாமல் அரியலூரில் உள்ள அனிதாவின் வீட்டிற்க்கு நேரில் சென்று அவரது தந்தைக்கு ஆறுதல் கூறினார். இதேபோல் அனைத்து நடிகர்களும் சென்று ஆறுதல் கூறி, நல்ல முடிவு ஏற்பட வழி செய்தால் நன்றாக இருக்கும்.