விவேகம் படம் பற்றி மிகவும் கேவலமாக பேசியதால் மாறனுக்கு எதிராகவும், விவேகம் படக்குழுவிற்கு ஆதரவாகவும்  சினிமா பிரபலங்கள் ராகவா லாரன்ஸ், விஜய் மில்டன், ரூபன், சமுத்திரக்கனி , மேலும் பலர்  குரல் கொடுத்துள்ளனர்.

இந்த வரிசையில் தளபதியின் தீவிர ரசிகரான ஜி வி பிரகாஷ் தன் ட்விட்டரில் தன் கருத்தை பதிவிட்டுள்ளார் “ரசிகர்கள் முடிவு செய்யட்டும் ஒரு படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்று, நெகடிவ் விமர்சனங்களால் ஒரு படத்தின் வியாபாரத்தை கெடுப்பது நியாயமில்லை .இது அனைத்து படங்களுக்கும் பொருந்தும்.”

தளபதியின் உடன் பிறவா தம்பியான சாந்தனு டீவீட்டியது என்ன வென்றால் “இது தல தளபதி சண்டை இல்லை. சினிமாவை வைத்து பொழைக்கிற ஒருத்தர் நம்ம சக நடிகரோட பொறப்ப தப்பா பேசுனா எப்புடி!” என்று                        

மேலும் “படத்தை விமர்சனம் பண்ணுங்க தப்பு இல்லை இன்னோருத்தரோட பொறப்பை தப்பு சொல்ல என்ன தகுதி இருக்கு?” என்றும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: இனி யாரும் ப்ளூ சட்டை வாங்கவும் மாட்டாங்க ,போடவும் மாட்டாங்கலோ?