ஜல்லிக்கட்டு தடையை நீக்க சமூக ஆர்வலர்கள் பலரும் பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் திரைத்துறையில் பெரிதாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்கவில்லை.

சிம்பு, இயக்குனர் அமிர், நடிகை நிவேதா போன்ற ஒருசிலரே இதை செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தன் பங்கிற்கு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆல்பம் ஒன்றை வெளியிடவுள்ளார்.

கொம்பு வச்ச சிங்கம்டா என தொடங்கும் இந்த பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதி பாடியுள்ளார். இதை கேள்விப்பட்டு ரசிகர்கள், ஏன் இவர் மட்டும்தான் தமிழரா? எல்லோரும் இதுபோல் செய்யலாமே என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.