ஜி.வி.பிரகாஷ்க்கு யாருடனாவது போட்டி போடுவதே வேலையாகிவிட்டது என்று கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். தனுஷை விரோதியாக நினைக்கும் ஜி.வி.பிரகாஷ் அவரின் ஹீரோயின்களுடன் ஜோடி சேர முயற்சிக்கிறார்.

இந்நிலையில் அவர் விஜய்சேதுபதியுடன் போட்டி போடுகிறாராம். விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு அதிக படங்கள் வெளியானாலும் அனைத்தும் வெற்றி பெற்றன. இந்த ஆண்டும் அவர் நடிப்பில் 7,8 படங்கள் ரிலீஸாகின்றன. விஜய்சேதுபதிக்கு போட்டியாக தானும் அதிக படங்களில் நடிக்க விரும்புகிறார் ஜி.வி.பிரகாஷ்.

ஜி.வி.பிரகாஷ் கையில் தற்போது 8,9 படங்கள் உள்ளன. போட்டியில் ஜெயிக்க ஜி.வி.பிரகாஷ் தன்னை தேடி வரும் பட வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக் கொள்கிறாராம். வாங்க, வாங்க நான் நடிக்கிறேன் என்று தன்னை தேடி வரும் இயக்குனர்களிடம் கூறுகிறாராம்.