தளபதி விஜய்யின் தம்பி, ரசிகன் என மீண்டும் ஒரு முறை நிரூபித்த ஜி வி பிரகாஷ் !

ஜி வி பிரகாஷ்

இவர் ரஹ்மான் அவர்களின் உறவினர் என்ற இடத்தில் ஆரம்பித்து பின்னர் இளம் இசையமைப்பாளர் , வளர்ந்து வரும் நடிகர் என்றெல்லாம் சொல்லப்பட்டு இன்று கோலிவுட்டில் முன்னணி ஹீரோ மற்றும் இசை அமைப்பாளர் என்ற இடத்தை பிடித்துவிட்டார். நடிகராக இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்த படம் என்றால் அது பாலாவின் நாச்சியார் தான். இந்திய அளவில் இவர் நடிப்பை பாராட்ட வைத்து விட்டது நாச்சியார். நடிகராக இவர் செம்ம பிஸி. குப்பத்து ராஜா, 4 G , 100 சதவிகிதம் காதல், ஐங்கரம், சர்வம் தாளமயம், விர்ஜின் மாப்பிள்ளை என்று பல படங்களில் ஹீரோவாக நடித்துவருகிறார்.

GVPrakash_Illayaraja_SPB
GVPrakash

விஜய்யின் ரசிகர்

ஜி வி தளபதியின் தீவர ரசிகர். தன்னை விஜய்யின் ரசிகர் என்பதை பல பேட்டிகளில், சினிமா நிகழ்ச்சிகளில், விருது வழங்கும் மேடைகளில் சொல்லுபவர். விஜய் ரசிகர்களும் இவரை தளபதியின் உடன் பிறவா தம்பி என்ற இமேஜில் தான் வைத்துள்ளனர். இது அனைத்தும் நாம் அறிந்த சங்கதியே.

சர்வம் தாளமயம்

sarvam thalamayam

‘மின்சாரக்கனவு’, ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கும் படம் ‘சர்வம் தாளமயம்’. ஜி. வி. பிரகாஷ் நாயகன், அபர்ணா பாலமுரளி தான் ஹீரோயின். இசை ரஹ்மான். ஒளிப்பதிவு ரவியாதவ். படத்தொகுப்பு ஆண்டனி.

இந்நிலையில் இப்படத்தின் பாடல் ஷூட்டிங் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. ரஹ்மான் இசையமைப்பில் ஜி வி நடனமாடுகிறார். மேலும் அங்கு மெர்சல் படத்தின் விஜய்யின் பாணர்கள் பாக் ட்ராப்பில் உள்ளது. அதுமட்டுமன்றி ரசிகர் மன்ற நிர்வாகிகளின் பெயர் , மற்றும் போட்டோவில் ஜி வி பிரகாஷின் போட்டோவும் உள்ளது. படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் பீட்டர். எனவே இப்படத்தில் விஜய் ரசிகராக நடித்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

இந்த விடியோவை சமூகவலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுவரும் இப்படத்தில் கலக்கல் கானா பாடல் உள்ளது என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Comments

comments

More Cinema News: