சிம்புவுக்காக கதையையே மாற்றிய கௌதம் வாசுதேவ் மேனன்.. ஐடியாவே இல்லாமல் சுற்றிதிரிந்த STR

மாநாடு திரைப்படத்தின் ஹிட்டை தொடர்ந்து சிம்புவுக்கு அடுத்த ட்ரீட்டாக அமைந்தது தான் வெந்து தணிந்தது காடு திரைப்படம். இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருந்தார். ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரித்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது.

சிம்பு- கௌதம் கூட்டணியில் இது மூன்றாவது திரைப்படம் ஆகும். ஏற்கனவே விண்ணை தாண்டி வருவாயா தான் இவர்கள் இருவரும் முதன் முதலாக இணைந்த திரைப்படம். இந்த படம் சிம்புவிற்கு ஒரு மிகப்பெரிய பிரேக் கொடுத்தது என்றே சொல்லலாம்.

Also Read: சிம்பு மட்டும் இதை செய்தால் அமிதாப் பச்சன் லெவெல்க்கு வருவார்.. மனம் திறந்த கௌதம் வாசுதேவ் மேனன்

கோவில் திரைப்படத்திற்கு பிறகு சிம்புவுக்கு அவ்வளவாக காதல் படங்கள் ஏதும் அமையவில்லை. மன்மதன், சிலம்பாட்டம் போன்ற படங்களில் நடித்திக் கொண்டிருந்தார். இந்த சமயத்தில் தான் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் சுறா என்னும் ஆக்சன் திரைப்படத்தின் கதையை சொல்லி இருக்கிறார்.

சிலம்பாட்டம் திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவுக்கு அடுத்ததாக ஆக்சன் படம் பண்ண ஐடியா இல்லயாம்.மேலும் தொடர்ந்து இது போன்ற படங்களில் நடிப்பதால் அவருக்கு பெண் ரசிகர்கள் அவ்வளவாக இல்லாதது மாதிரி சிம்பு பீல் பண்ணியிருக்கிறார். எனவே GVM மிடம் லவ் ஸ்டோரி படம் பண்ணலாம் என்று கூறியிருக்கிறார்.

Also Read: சிம்புவை போல் வம்பில் சிக்கிய நடிகர்.. அடுத்தடுத்த புகாரால் வந்த அவப்பெயர்

அப்போது கௌதமிடம் ஜெஸ்ஸி என்னும் பெயரில் விண்ணை தாண்டி வருவாயா திரைப்படத்தின் கதை தான் இருந்து இருக்கிறது. அது முழுக்க முழுக்க ஹீரோயினை மையப்படுத்திய கதை ஹீரோவுக்கு அவ்வளவாக ஸ்பேஸ் இருக்காது என்று GVM கூறியதற்கு, சிம்பு பரவாயில்லை என்று சொல்லி அந்த படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம்.

பிறகு தான் இந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா என டைட்டல் மாற்றப்பட்டு சிம்புவுக்காக கதையும் கொஞ்சம் மாற்றப்பட்டு இருக்கிறது. சிம்பு எதிர்பார்த்ததை விட இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பெண் ரசிகர்களும் அதிகமாகினர்.

Also Read: தோல்வி பயத்தை மறைமுகமாக காட்டிய வலிமை, கோப்ரா.. வெற்றிக்காக கௌதம் மேனன் போட்ட பிளான்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்