Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜி.வி.பிரகாஷ், ஏ.ஆர்.ரஹ்மான், ராஜிவ் மேனன் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், பட பூஜை .

ஜி. வி. பிரகாஷ் நடிக்கும் படத்தை ராஜிவ் மேனன் இயக்குகிறார். இசையை பின்னணியாக வைத்து உருவாகும் இந்தப் படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த புதிய படத்தின் தலைப்பும், ஃபிர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது.

‘மின்சாரக்கனவு’, ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ ஆகிய படங்களை தொடர்ந்து. ராஜீவ் மேனன் இயக்கும் படத்தின் பெயர்  ‘சர்வம் தாளமயம்’. இசைமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் நாயகன் என்றால் பாடகி, மற்றும் நடிகையான அபர்ணா பாலமுரளி தான் ஹீரோயின்.இந்த படம் பாடல் மற்றும் இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படவிருக்கும் படம் என்ற தகவலும் வெளியாகியிருந்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. ‘மைன்ட் ஸ்கிரீன்ஸ் சினிமாஸ்’ நிறுவனம் சார்பில் லதா தயாரிக்கிறார். ஒளிப்பதிவு ரவியாதவ். படத்தொகுப்பு ஆண்டனி. பாடல்கள் மதன் கார்க்கி, அருண் ராஜா மற்றும் மறைந்த பாடல் ஆசிரியர் நா. முத்துக்குமாரின் பாடலும் இடம் பெறவுள்ளது.

இசையை கதைக்கருவாக கொண்டுள்ள இந்த திரைப்படத்தில் மொத்தம் 9 பாடல்கள்.  இது வரை ராஜிவ் மேனனின் படங்களில் பாடல்கள் அனைத்தையும் வைரமுத்து அவர்கள் தான் எழுதுவார். இப்படத்தில் அவர் ஒரு பாடல் கூட எழுதவில்லை என்பது தான் ஆச்சர்யம்.

இதற்கு முன் தமிழில்  மணிரத்தினம் அவர்களின் குரு மற்றும் கடல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். தற்பொழுது 18 வருடங்களுக்கு பிறகு இவர் படம் இயக்குவதால் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top