Tamil Cinema News | சினிமா செய்திகள்
தமிழ் மேல் உள்ள பற்றால் ஜி வி பிரகாஷ் எடுத்த புதிய முடிவு ! குவியுது பாராட்டு – போட்டோ உள்ளே !
ரஹ்மான் அவர்களின் உறவினர் என்ற இடத்தில் ஆரம்பித்து பின்னர் இளம் இசையமைப்பாளர் , வளர்ந்து வரும் நடிகர் என்றெல்லாம் சொல்லப்பட்டு இன்று கோலிவுட்டில் முன்னணி ஹீரோ மற்றும் இசை அமைப்பாளர் என்ற இடத்தை பிடித்துவிட்டார்.

t
இவர் இனிமேல் தமிழில் தான் கையெழுத்து போடுவதாக முடிவு எடுத்துள்ளதாக தன் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார்.
உலகம் வென்ற தமிழ் , நமை கர்வம் கொள்ள வைத்த தமிழ் , எனை ஆட்கொண்ட தமிழ்…இனி புதிய விதி செய்யும் என் “கையெழுத்துகள்” தமிழில் மட்டும் என்று உளமாற உறுதி ஏற்கிறேன் … #தமிழ்விதியெனசெய் pic.twitter.com/miSackRIOk
— G.V.Prakash Kumar (@gvprakash) September 2, 2018
பொதுநலம் மற்றும் சமூக நலன் மேல் அதிக அக்கறை கொண்டவர். ஜல்லிக்கட்டு, காவிரி மேலாண்மை, ஸ்டெர்லைட் ஆலை மூடுதல் உள்ளிட்ட போராட்டங்களில் கலந்துக் கொண்டு குரல் கொடுத்த இவர், தமிழுக்கு அளித்த இந்த மரியாதையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

GVP
சினிமாபேட்டை கமெண்ட்ஸ்
ஏதுஏதுக்கோ சாலஞ் உருவாக்கி ட்ரெண்ட் ஆக்குகின்றனர் வெளிநாடுகளில், நாமும் அதனை பின் பற்றுகிறோம். அதேபோல் இந்த கையெழுத்தை வைத்து ஒரு சாலஞ் போடுங்க ப்ரோ ப்ளீஸ். .
