Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மனைவியின் பிறந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடிய GV பிரகாஷ்! புகைப்படம் உள்ளே.!

இசையமைப்பாளர் GV பிரகாஷ் திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். படம் தாறுமாறு ஹிட். அடுத்து நடித்த டார்லிங் படமும் ஹிட். இதலாம் நடக்காம இருந்தா இந்த நடிப்ப பாக்கனுங்கற நிலமை பல பேருக்கு வந்திருக்காது.

என்ன பன்ன ஆண்டவன் நம்மல இப்படியும் பழிவாங்குகிறார்.ஜி.வி பிரகாஷ் கையில் தற்பொழுது அரை டஜன் படங்கள் கையில் இருக்கிறது. தற்போது
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது ‘அடங்காதே’, ‘4ஜி’, ‘ஐயங்கரன்’, ‘நாச்சியார்’, ‘குப்பத்து ராஜா’, ‘100% காதல்’ ஆகிய படங்கள் நடித்து வருகிறார்.

அடங்கதே படத்தை புதுமுக இயக்குனர் சண்முகம் முத்துசுவாமி இயக்குகிறார் இதை எம்.எஸ்.சரவணன் தயாரிக்கிறார் இந்த படத்தில் சரத்குமார்,மந்திரா பேடி,சுரபி ,தம்பி ராமையா ,ரோபோ சங்கர் ,யோகிபாபு என பல நட்ச்சத்திர பிரபலங்கள் நடிக்கிறார்கள்.

அதேபோல் 4ஜி படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் உதவியாளராக இருந்த வெங்கட் பாக்கர் இயக்குகிறார்.

நாச்சியார் படத்தை பால இயக்குகிறார் இந்த படத்தில் ஜோதிகா நடிக்கிறார்,சமீபத்தில் டீசர் வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியது ஆனால் அதை எதுவும் கண்டுகொள்ளாமல் படக்குழு அவர்கள் வேலையை பார்த்துவருகிரார்கள்.

ஐயங்கரன் படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு சமீபத்தில் தொடங்கியது தற்பொழுது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது இந்த படத்தை ஈட்டி இயக்குனர் ரவி அரசு இயக்குகிறார்.

ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக மஹிமா நம்பியார் நடிக்கிறார் இது ஒரு கல்லூரியில் நடக்கும் கதை இந்த படத்தில் ஜி வி பிரகாஷ் மெக்கானிக் இன்ஜினீயராக நடிக்கிறார் அதுமட்டும் இல்லாமல் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஏற்ற படமாக இருக்கும், இந்த ஐயகரன் படம் என எதிர்பார்க்கபடுகிறது.

தற்போது ‘ஐங்கரன்’ படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.இந்த படப்பிடிப்பில் தனது மனைவியும், பாடகியுமான சைந்தவியின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.

gv

அப்போது, ‘ஐங்கரன்’ படத்தின் இயக்குனர் ரவி அரசு, ‘அடங்காதே’ படத்தின் இயக்குனர் சண்முகம் மற்றும் ஐங்கரன் படக்குழுவினர் ஆகியோர் சைந்தவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top