Gv Prakash: பரஸ்பரமாக விவாகரத்து அறிக்கையை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்.. அதிர்ந்து போன திரையுலகம்

gv-prakash
gv-prakash

Gv Prakash: திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்லியதெல்லாம் தற்போது காத்துல பறந்து போய்கிட்டு வருகிறது. கல்யாணம் பண்ணி சந்தோஷமாக இல்லற வாழ்க்கையை தொடர்ந்து நடத்தி வந்தாலும் சில வருடங்கள் கழித்து சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வருவதால் உடனே அவர்களுக்கு ஒரே தீர்வு விவாகரத்து என்ற முடிவை எடுத்து விடுகிறார்கள்.

அதுவும் இந்த ஒரு விஷயம் சினிமா பிரபலங்களுக்கு அல்வா சாப்பிடற மாதிரி ஆகிவிடுகிறது. கல்யாணம் கசந்து போய்விட்டால் அடுத்த நொடியே அவர்கள் போய் நிற்கிறது விவாகரத்து கேட்டு கோர்ட்டில் தான். அப்படி சமீபத்தில் பல பிரபலங்கள் தொடர்ந்து விவாகரத்து செய்து கொண்டு வருகிறார்கள்.

எக்ஸ் தளத்தில் அறிவிப்பை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்

gv prakash
gv prakash

இப்பொழுது பிரபல இசை அமைப்பாளர் மற்றும் நடிகருமான ஜிவி பிரகாஷ் அவருடைய 11 ஆண்டு கல்யாண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் அளவிற்கு திருமணம் கசந்து போய் விட்டதாக பரஸ்பரமாக இருவரும் விவாகரத்து பண்ண முடிவெடுத்து விட்டார்கள்.

இது சம்பந்தமாக ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை பிரிவதாக எக்ஸ் வலைதளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதாவது நீண்ட யோசனைக்கு பிறகு சைந்தவியும் நானும் திருமணம் ஆகி 11 ஆண்டு வருடங்கள் கழித்து ஒருவருக்கொருவர் பரஸ்பரமாக பிரிய முடிவு எடுத்து இருக்கிறோம்.

எக்ஸ் தளத்தில் அறிவிப்பை வெளியிட்ட சைந்தவி

saindhavi
saindhavi

எங்கள் மன அமைதிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் பிரிந்து செல்ல முடிவு செய்து இருக்கிறோம். எங்களுடைய இந்த தனி உரிமையை புரிந்து கொண்டு பத்திரிகையாளர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அதை மதிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இந்த நேரத்தில் உங்களுடைய புரிதல் மற்றும் ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று ஜிவி பிரகாஷ் பதிவிட்டு இருக்கிறார்.

இவர் போட்ட பிறகு இவருடைய மனைவி சைந்தவியும் அதே மாதிரி எக்ஸ் வலைதளத்தில் நாங்கள் பரஸ்பரமாக பிரிகிறோம் என்று பதிவிட்டு இருக்கிறார். இவர்களுடைய பதிவை பார்த்த திரையுலகம் ரொம்பவே அதிர்ந்து போய் இருக்கிறார்கள்.

Advertisement Amazon Prime Banner