Tamil Cinema News | சினிமா செய்திகள்
தன்னுடைய ‘தளபதி’க்காக விட்டுக்கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!
கடவுள் இருக்கான் குமாரு படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ப்ரூஸ்லீ. இப்படத்தின் மூலம் நடிகர் ஜி.வி.பிரகாஷ் முதல்முறையாக ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார்.
இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக கீர்த்தி கர்பண்டா நடித்துள்ளார். பிரபல தெலுங்கு மற்றும் கன்னட பட நடிகையான அவர், தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுவேயாகும். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படம் வரும் பொங்கலன்று விஜய்யின் “பைரவா” படத்துடன் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இதில் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது படம் பிப்ரவரியில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
