Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முரட்டு சிங்கிள்களுக்காக ஒரு படம். வைரலாகுது ஜி வி பிரகாஷ் – ரைசா வில்சன் நடிக்கும் பட டைட்டில் லுக், மோஷன் போஸ்டர்.

ஜி வி – ரைசா இணையும் படத்தின் டைட்டில் காதலிக்க நேரமில்லை .

1964 இல் வெளியான ரொமான்டிக் காமெடி படத்தின் தலைப்பை தான் இந்த படக்குழு முடிவு செய்துள்ளது.

ஆரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் திகில் கலந்த ஃபேன்டஸி திரைப்படமாக உருவாகி வருகிறது. அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்குகிறார். ஊட்டியில் முதல் கட்ட ஷூட்டிங் முடிந்து, இதன் படப்பிடிப்பு தற்பொழுது சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. குரு சோமசுந்தரம், ஷா ரா, ஆனந்தராஜ் மற்றும் செந்தில் இப்படத்தில் நடிக்கின்றனர்.

எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். நாயகனாக நடிப்பது மட்டுமன்றி, இசையமைப்பாளரும் ஜி.வி.பிரகாஷ் தான். சிவனாண்டீஸ்வரன் எடிட்டிங்.

gv prakash raiza wilson

இன்று காலை டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது.

தற்பொழுது மாலையில் மோஷன் போஸ்டரை ஹீரோ தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

கடவுள் பிஸியாக என் காதல் கதையை எழுதுகிறார், என கூறி லிங்க் ஷேர் செய்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top