ஜி.வி. பிரகாஷ் நடித்த எனக்கு இன்னொரு பேர் இருக்கு படம் அண்மையில் தான் திரைக்கு வந்தது. அதேநேரத்தில் இப்படத்தின் திருட்டு வி.சி.டி.களிலும், இணையதளத்திலும் அமோகமாக படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனால் ஜி.வி. பிரகாஷ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

பின்னர் பேசிய ஜி.வி, எனக்கு இன்னொரு பேர் இருக்கு என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் அந்த படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விட்டனர்.

திருட்டு வி.சி.டி.யும் தயாரித்து விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. திருட்டு வி.சி.டி. தயாரிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் முறையிட்டேன் என்றார்.