Connect with us

Cinemapettai

வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் – ‘எங்க வீட்டு மாப்பிளை’ புகழ் அபர்ணதி இணையும் பட பூஜை! போட்டோ உள்ளே

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் – ‘எங்க வீட்டு மாப்பிளை’ புகழ் அபர்ணதி இணையும் பட பூஜை! போட்டோ உள்ளே

வசந்தபாலன்

‘ஆல்பம்’ ,`வெயில்’, `அங்காடித் தெரு’, `அரவாண்’, `காவியத் தலைவன்’ என எதார்த்தமான படங்களை எடுத்தவர். படங்களின் எண்ணிக்கை குறைவாகவும் தரம் அதிகமாகவும் இருக்க வேண்டும் எனது இவரின் லாஜிக்.

ஜி வி 17

வெயில் படம் வாயிலாக ஜி வி பிரகாஷை சினிமாவில் இசை அமைப்பாளராக அறுமிகப்படுத்தியவர் வசந்த பாலன். தற்பொழுது அவர் படத்தில் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார் ஜி வி.

இன்னமும் பெயர் முடிவு செய்யப்படவில்லை இப்படத்திற்கு. ஆர்யாவின் ‘எங்க வீட்டு மாப்பிளை’ நிகழ்ச்சியின் வாயிலாக பிரபலம் அடைந்த அபர்ணதி ஹீரோயினாக தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆகிறார்.

முக்கியக் கதாபாத்திரத்தில் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்துக்கு, கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் பூஜையுடன் துவங்கியது.

இந்நிலையில் இப்படத்தை பற்றி தன் ட்விட்ட்டேரில் `ஜி.வி.17 படப்பிடிப்பு ஆரம்பம்… சினிமாவில் என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் நடிக்கிறேன். இந்திய சினிமாவில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top