இசையமைப்பாளராக அறிமுகமாகி ஹீரோவாக ஃபார்மாகி விட்டவர் ஜீவி பிரகாஷ் . வரிசையாக படங்கள் ஹிட் அடிப்பதால், முக்கியமாக கடைசியாக வெளியான படம் பிளாக்பஸ்டர் ஹிட்டும் அடித்திருப்பதால் ஹீரோவின் மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. இதுவரை சொந்தத் தயாரிப்பில் தான் படங்கள் தயாரித்து நடித்து வந்தார்.

வெளிவரவிருக்கும் ஹாரர் படம் வரை சொந்தத் தயாரிப்புதான். எல்லாவற்றுக்குமே பட்ஜெட் ரெண்டு கோடிக்குள்தான். பிளாக்பஸ்டர் படத்தில் கூட சில காட்சிகளை படம் பிடிக்காமல், ஷட்டர்ஸ்டாக் எனப்படும் இணையதளத்தில் இருந்து எடுத்து அழகாக மேட்ச் பண்ணி காசு மிச்சம் பண்ணினார்.

ஜீவி பிரகாஷ் அடுத்த படத்துக்கு மொபைல் கம்பெனிதான் தயாரிப்பு. ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இசை படம் எடுத்து வருகிறார். இதற்கு பட்ஜெட் என சொல்லி வாங்கியது எட்டு கோடியாம். ஆனால் படத்தை வழக்கம்போல லோ பட்ஜெட்டுக்குள்தான் எடுத்து வருகிறார். இசையின் ‘வெவரத்தை’ பார்த்து ஆச்சர்யப்படுகின்றனர் கோலிவுட்டில்…