ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும், ஜி.வி.பிரகாஷின் அம்மாவுமான ரஹைனா தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கிறார்.

‘யோகி அண்ட் ஃபிரெண்ட்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி முதல் படமாக ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ என்ற படத்தை தயாரிக்கிறார்.

இவருடன் சுபா மற்றும் வாசுகி ஆகியோரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

அசார் ஹீரோவாக நடிக்க, சஞ்சிதா ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். விஜய் டிவி புகழ் விக்னேஷ் கார்த்திக் இயக்கவுள்ளார்.

இவர்களுடன் யோகி பாபு, மன்சூர் அலிகான், ‘வழக்கு என் 18/9′ புகழ் முத்துராமன், உமா பத்மநாபன், ‘இருக்கு ஆனா இல்ல’ புகழ் ஏதேன், சிங்கப்பூர் தீபன், விஜய் டிவி ராமர், டாக்டர் ஷர்மிலி மற்றும் விஜய் டிவி அர்ச்சனா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர். ரெஹானாவே இசையமைக்கிறார். படத்தொகுப்பை பிரேம் குமார் கவனிக்க, ஒளிப்பதிவாளராக வம்ஷிதரன் பணிபுரிய இருக்கிறார்.

தலைக்கு எண்ணெய் வைக்காததால், படத்தின் நாயகன் ஒரு பிரச்சனையில் மாட்டி கொள்கிறாராம். அதிலிருந்து தப்பிக்க அவர் என்ன செய்கிறார்? என்பதை படத்தின் ஒருவரிக் கதை என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தன் மகன் ஜிவி. பிரகாஷ் நாயகனாக நடிக்கவுள்ள படத்தை தயாரிக்கிறாராம் ஏ.ஆர்.ரஹைனா.