Connect with us

Cinemapettai

பூம் பூம் மாட்டுக்காரருக்கு சான்ஸ் கொடுக்க ரெடியாக இருக்கும் ஜி வி பிரகாஷ்- ப்ளீஸ் கண்டுபிடிக்க உதவுங்க

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பூம் பூம் மாட்டுக்காரருக்கு சான்ஸ் கொடுக்க ரெடியாக இருக்கும் ஜி வி பிரகாஷ்- ப்ளீஸ் கண்டுபிடிக்க உதவுங்க

ஜி வி பிரகாஷ் ரஹ்மானின் உறவினர் என்ற அடைமொழியுடன் தான் சினிமா இண்டஸ்ட்ரியில் நுழைந்தார். இன்று மனிதர் வேற லெவல் ஆகிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். படங்களுக்கு இசை அமைப்பது  மட்டுமன்றி  இன்று மினிமம் கேரண்டி ஹீரோவாக மாறிவிட்டார். எப்படி இவர் நடிப்பது, இசை அமைப்பது, தனது பெர்சனல் வாழ்க்கை என பாலன்ஸ் செய்கிறார் என்பதே நமக்கு ஆச்சர்யமான ஒன்றாக தான் இருக்கிறது.

ஜி வி பதிவிட்ட ட்வீட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நெட்டிசன் ஒருவர் மாட்டுடன் சாலையில் நாதஸ்வரம் வாசிப்பவரின் வீடியோவை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இவரது வாசிப்பையும், இருக்கும் நிலைமையையும் பாருங்கள், இசைக்கு இப்படி ஒரு நிலைமையா எனக் குறிப்பிட்டிருந்தார்.

gv prakash kumar tweet

இந்த டீவீட்டை தான் ஜி.வி.பிரகாஷ், ‘இந்த நபரை கண்டுபிடிக்க முடிந்தால், நாம் அவரை பாடல் பதிவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்புகள் மிக திறமையாகவும், துல்லியமாகவும் இருக்கின்றன’ எனக் குறிப்பிட்டு அந்த வீடியோவை ரீ-ட்வீட் செய்திருக்கிறார்.

இந்த் ட்வீட் நமக்கு ஜி வி அவர்கள் ராஜீவ் மேனன் இயக்கத்தில் நடித்த சர்வம் தாளமயம் படத்தை தான் நினைவூட்டுகிறது.  இதனை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். விரைவில் இவரை கண்டுபிடிக்கும் பட்சத்தில் சினிமா, விஜய் டிவி என அவர் புகுந்து கலக்க சரியான வாய்ப்புள்ளது.

அவரின் திறனை பார்க்க இந்த லிங்க் க்ளிக் செய்க ..

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top