fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கிட்ட வந்தா இழுத்து வச்சு அறுத்திடுவேன்.. வெளியான ஜெயில் பட வீடியோ.

jail

Videos | வீடியோக்கள்

கிட்ட வந்தா இழுத்து வச்சு அறுத்திடுவேன்.. வெளியான ஜெயில் பட வீடியோ.

ஜிவி பிரகாஷ் சமீபகாலமாக வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களும் ஜிவி பிரகாஷ் வைத்து படங்களை இயக்கி வருகின்றனர்.

தற்போது வசந்தபாலன் ஜிவி பிரகாஷ் உடன் கூட்டணி அமைத்து ஜெயில் என்ற படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்றது.

தமிழ் சினிமாவில் படத்தயாரிப்பு மற்றும் திரைப்பட விநியோகம் உள்ளிட்ட துறைகளில் கொடிகட்டி பறந்து வருகிறார் ஸ்ரீதரன் மரியதாஸன். திரையுலகில் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் என பன்முக திறமைகளை கொண்டிருப்பவர் ஸ்ரீதரன் மரியதாஸன். Krikes Cine Creations என்ற நிறுவனத்தின் மூலம் பல்வேறு ஆங்கில படங்களை தமிழகத்தில் விநியோகம் செய்கிறார் .

அதுமட்டுமல்லாமல் மிஸ்கின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகிய சவரக்கத்தி என்ற படத்தையும் இவர்தான் வெளியிட்டார். மேலும் விஷால் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவான இரும்புத்திரை படத்தினை லைகா நிறுவனத்தோடு சேர்ந்து வெளியிட்டார்.

இப்படி தமிழ் சினிமாவில் பல வெற்றிகளை கண்டுள்ள ஸ்ரீதரன் மரியதாஸன் தயாரிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் தான், வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில். இந்த படத்தின் டீசர், பாடல்கள், போஸ்டர்கள் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில்  படத்தின் சிறிய காட்சியை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top