தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. (Install CinemaPettai Android App)

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கபோவதாகவும் தெறி படத்தை தொடர்ந்து இந்த படத்தையும் அட்லி இயக்குவார் என்றும் சில தினங்களாக கூறப்பட்டு வந்தது.

நியூஸ் வருவதற்கு முன்னாடியே அனிருத் சொல்லி இருந்தாரம் விஜயிடம். அடுத்த படத்துக்கு நான்தான் மியூசிக் போடுவேனு. விஜயும் செல்லமா ஓகே சொன்னாரம். ஆனால் தயாரிப்பாளர் ஜி வி பிரகாஷ் இருந்தா தெறி மாதிரி எதிர்பார்ப்பு இருக்கும்போது இதே இருக்கட்டும்னு. விஜயும் நெக்ஸ்ட் மீட் பண்ணலாம்னு அனிருதிடம் சொல்லி விட்டாராம்.

இத்தகவலை தற்போது ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பாளர் முரளியின் மனைவியார் ஹேமா ருக்மணி உறுதிப்படுத்தியுள்ளார். இதைதொடர்ந்து தெறி படத்துக்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ்தான் இந்த படத்துக்கும் இசையமைப்பார் என தகவல் கசிந்துள்ளது.  (Install CinemaPettai Android App)