ஜி.வி.பிரகாஷ் நடிக்க இருக்கும் அடுத்த 3டி படத்தை சர்ச்சை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இரண்டு படங்களுமே அவரை சுற்றி சர்ச்சை தான் அதிகமாகவே நிலவியது. பெரும் பில்டப்புடன் தொடங்கப்பட்ட ட்ரிப்பிள் ஏ படம் வெளியீட்டிற்கு பிறகு காற்று போன பலூன் ஆனது. படத்துக்குக் கிடைத்த எதிர்மறை விமர்சனங்கள் காரணமாக இரண்டாம் பாக முடிவும் கைவிடப்பட்டது.

இந்நிலையில், எல்லா பிரச்சனைகளையும் முடித்துக்கொண்டு மூன்றாவது படத்தின் வேலைகளில் களமிறங்க இருக்கிறார். இந்தப் படம் 3டி படமா உருவாக இருக்கிறது. வழக்கமான காதல் கதையாக இல்லாமல் ஃபேண்டஸி காதல் படமா இதை படக்குழு உருவாக்க இருக்கிறது. ஒரு காதலை மட்டுமே கொண்டு போகும் சினிமாக்களுக்கு மத்தியில் சமீபகாலமாக காதலில் வெரைட்டி காட்ட தொடங்கி விட்டனர். தொடக்கத்தில் நாயகி என்றால் அவர் திருமணம் செய்து கொள்வது வேறு ஒருவரை என்பதே இன்றைய ஸ்டைலாக மாறி விட்டது. இந்த படத்திலும் ஒரு நாயகி இல்லை. ஜி.விக்கு அனேகன் அமைரா தஸ்தூர், சஞ்சிதா ஷெட்டி மற்றும் புதுமுக நடிகை என மூன்று நாயகிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்றார் போல, ஜி.வியும் மூன்று விதமான கெட்டப்பில் வர இருக்கிறது.

அதிகம் படித்தவை:  விஜய் படத்துடன் புரூஸ்லீ வரல…! ஆனா விஜய்யை விட மாட்டார் ஜி.வி.பிரகாஷ்

இசையில் ஜொலித்த ஜி.வி.பிரகாஷிற்கு சமீபகாலமாக தான் நாச்சியார், தாளம் சிவமயம் படங்கள் மூலம் நடிப்பில் ஒரு நல்ல அடித்தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்படமும் அந்த லிஸ்டில் சேரும் என்கிறது கோலிவுட் பட்சிகள்.

அதிகம் படித்தவை:  ஜி.வி.பிரகாஷின் அடங்காதே படப்பிடிப்பு ஆரம்பம்!
GV Prakash

இப்படத்திற்கு, ஜி.வி தான் இசையமைக்கிறார். இதுகுறித்து, சமீபத்தில் மனம் திறந்துள்ள ஆதிக், ரொம்ப நல்ல டெக்னிகல் டீம் இந்தப் படத்துல இருக்காங்க. கண்டிப்பா ரசிகர்களின் ஆசையை நிவர்த்தி செய்யும் வித்தியாசமான அனுபவமாக இப்படம் இருக்கும் எனத் தெரிவித்து இருக்கிறார்.

தொடர்ந்து, அடுத்த படத்தில் சிம்புவை வைத்து இருக்கிறேன். அது ட்ரிப்பிள் ஏ படத்தின் மூன்றாம் பாகமாக இருக்காது. ஒரு த்ரில் ஆக்‌ஷன் படமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.