ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அஜித் பட இயக்குனருடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்

gv-prakash-ar-rahman‘ப்ரூஸ் லீ’, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ மற்றும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ ஆகிய படங்கள் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தயாராகி வருகிறது.

அதனைத் தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அப்படத்தைத் தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். ‘மின்சார கனவு’ மற்றும் அஜித் நடித்த ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஏ.ஆர்.ரஹ்மான் – ஜி.வி.பிரகாஷ் இருவருமே உறவினர்கள் என்றாலும் இருவரும் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறை.

Comments

comments

More Cinema News: