Tamil Cinema News | சினிமா செய்திகள்
தனுஷை தொடர்ந்து ஹாலிவுட் சென்ற ஜிவி பிரகாஷ்.. லிப் கிஸ் அடிக்கும் போதே நினைச்சேன்
இளம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருப்பவர் ஜிவி பிரகாஷ். ஹீரோவாக மட்டும் இல்லாமல் பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அசுரன் படத்தை தொடர்ந்து சூரரைப்போற்று படத்திலும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்கும் வல்லமையும் பெற்று இருக்கிறார். கைவசம் ஐந்தாறு படங்களை கொண்டுள்ள ஜிவி பிரகாஷ் ஹாலிவுட்டில் முதல் முறையாக அறிமுகமாக உள்ளார். பிரபல நடிகர் நெப்போலியன் உடன் இணைந்து ட்ராப் சிட்டி(Trap City) என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதில் பிரபல ஹாலிவுட் நடிகரான பிராண்டன் லீ ஜாக்சன் என்பவரும் நடித்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து ராப் சாங் பாடும் இளைஞர் திடீரென வறுமை காரணமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவது போலவும், திடீரென ராப் பாடல் உலகம் முழுவதும் பிரபலமாகும் போது அதை பாடியவர் ஜெயிலில் தண்டனை பெற்று இருக்கிறார் என்பதையும், அது பொறுக்காமல் அவனை கொலை செய்ய ஒரு கும்பல் துரத்துவதை போன்ற கதையம்சம் இடம்பெற்றுள்ளது.

trap-city
அமெரிக்காவில் நேஷனல் என்னுமிடத்தில் படப்பிடிப்பு முழுவதும் நடைபெற்ற முடிவடைந்துள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இந்த படத்தை இந்த வருட சம்மருக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர்.
இதனால் தனுஷை தொடர்ந்து ஹாலிவுட்டில் களமிறங்கும் ஜிவி பிரகாஷ், அங்கே வெற்றி கிடைக்குமா என பொருத்திருந்து பார்க்கலாம்.
