அஜித், விஜய் செய்யாததை செய்யும் ஜீவி பிரகாஷ்.. கொண்டாடும் இயக்குனர்கள்!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் ஜீவி பிரகாஷ் தற்போது பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனிடையே ஜிவி பிரகாஷ் எந்த நடிகரும் செய்யாத துணிச்சலான ஒரு செயலை செய்து வரும் செயல் தற்போது வெளியாகியுள்ளது.

தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் நடிக்கிறார். இத்திரைப்படத்தின் இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இதனிடையே தற்போது தெலுங்கில் சில திரைப்படங்களிலும் ஜிவி பிரகாஷ் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் அறிமுகமான திரைப்படத்தில் இருந்து தற்போது வரை நடிக்கும் அனைத்து படங்களிலும் புதுமுக இயக்குனர்களை தேர்வு செய்து அவர்களின் கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார். கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட புதுமுக இயக்குனர்களை ஜிவி பிரகாஷ் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

உதாரணமாக 2015ஆம் ஆண்டு டார்லிங் திரைப்படத்தின் மூலமாக ஜிவி பிரகாஷ் நடிகராக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் இயக்குனர் சாம் அண்டனை ஜிவி பிரகாஷ் அறிமுகம் செய்து வைத்தார். இதனிடையே தற்போது சாம் ஆண்டன் பல திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வளர்ந்து வருகிறார். அதேபோல சமீபத்தில் வெளியான பேச்சுலர் திரைப்படத்தை இயக்கிய சதீஷ் செல்வகுமாரை ஜிவி பிரகாஷ் அறிமுகம் செய்து வைத்தார்.

இத்திரைப்படம் வெற்றியானது, அடுத்து தற்போது சதீஷ் செல்வகுமார், கிரிக்கெட் வீரர் தோனியின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே ஜிவி பிரகாஷ் தான் நடிக்கும் திரைப்படங்களில் புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தி அவர்களின் திரைவாழ்க்கையில் ஒரு அச்சாரமாக திகழ்கிறார்.

இது குறித்து பிரபல இயக்குனர்கள் பல மேடைகளில் ஜிவி பிரகாஷை புகழ்ந்து வருகின்றனர். ஏனென்றால் பொதுவாக பெரிய நடிகர்கள் புதுமுக இயக்குனர்களின் திரைப்படங்களில் நடிப்பது என்பது தற்போதுள்ள சூழ்நிலையில் சாத்தியமானதல்ல. ஏற்கனவே ஒரு வெற்றி திரைப்படத்தை கொடுத்திருக்கும் இயக்குனர்களோடு மட்டுமே முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். ஆனால் ஜிவி பிரகாஷ் தற்போது வரை புதுமுக இயக்குனர்களின் திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருவது கோலிவுட் வட்டாரமே பாராட்டி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்