gv-prakash-avika-gorஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் ‘புரூஸ்லீ’ மற்றும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் எம்.ராஜேஷ் இயக்கவுள்ள ‘கடவுள் இருக்குறான் குமாரு’ படத்தின் படப்பிடிப்பில் ஜி.வி.பிரகாஷ் கலந்து கொள்ளவுள்ளார். இந்த படத்தை KIK என்ற டாக்லைனிலும் கூறுவதுண்டு

இந்நிலையில் இந்த படத்தின் நாயகிகள் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளனர். ஜி.வி.பிரகாஷின் முதல் நாயகியான நிக்கி கல்ராணியும், பிரபல தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்த அவிகாகோர் என்ற நடிகையும் ஜி.வி.பியுடன் ரொமான்ஸ் செய்யவுள்ளனர்.

கிக் படத்திற்காக எம்.ராஜேஷ் தற்போது லொகேஷன் பார்த்து வருவதாகவும், ராஜேஷின் மற்ற படங்களை போலவே இதுவும் ரொமான்ஸ் மற்றும் காமெடி அம்சங்கள் கொண்ட படம் என்றும் கூறப்படுகிறது.