வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

மீண்டும் இணையும் ஜிவி பிரகாஷ், சைந்தவி.. காரணம் தெரியுமா.?

Gv Prakash : சமீபத்தில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. இதே வருடம் தான் ஏ ஆர் ரகுமான் குடும்பத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சைந்தவியை பாரத செய்வதாக அறிவித்தார்.

இருவருமே பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்த நிலையில் இரு விட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதி இருக்கு ஒரு மகளும் உள்ளார். இந்த சூழலில் இசையமைப்பாளராக வளம் வந்த ஜிவி பிரகாஷ் நடிகராகவும் உருவெடுத்தார்.

இந்நிலையில் ஜீவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாக அறிவித்திருந்தனர். இப்போது மீண்டும் இவர்கள் இணையும் செய்தி ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது. அதாவது கோலாலம்பூரில் ஜிவி பிரகாஷின் இசை கச்சேரி நடக்க இருக்கிறது.

மீண்டும் இணையும் ஜிவி பிரகாஷ், சைந்தவி

வருகின்ற டிசம்பர் 7ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் இதில் சைந்தவி பாடல் பாட இருக்கிறார். இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைந்தவி கூறி உள்ளார். ஏனென்றால் ஜிவி பிரகாஷின் இசையில் சைந்தவி நிறைய பாடல்கள் பாடியிருக்கிறார்.

அந்த வகையில் இப்போது ஒரு இசையமைப்பாளரின் இசைக்கச்சேரி என்ற நிலையில் இப்போது சைந்தவி இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார். இசைக்காக இவர்கள் மீண்டும் இணைவது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆனாலும் இவர்கள் இல்லற வாழ்க்கையிலும் மீண்டும் இணைய வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். மேலும் கோலிவுட்டில் விவாகரத்து அதிகரித்து வரும் சூழலில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் மீண்டும் இணைந்தால் மகிழ்ச்சி தான்.

- Advertisement -

Trending News