fbpx
Connect with us

மீண்டும் இணையும் ஜி.வி.பிரகாஷ் – ஆதிக் ! சர்ச்சை கிளப்பும் புது பட தலைப்பு

மீண்டும் இணையும் ஜி.வி.பிரகாஷ் – ஆதிக் ! சர்ச்சை கிளப்பும் புது பட தலைப்பு

gv-prakash-adhikஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, மனிஷா யாதவ், சிம்ரன் நடிப்பில் வெளியான படம் ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை சி.ஜே.ஜெயகுமார் தயாரித்தார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தை வெளியிட்டது. செப்டம்பர் 17, 2015ல் வெளியான இப்படத்தை பெரும் சர்ச்சையானலும், வசூலை பெருமளவில் குவித்தது.

இப்படத்தின் பாடல்கள் 2015ல் அதிக முறை எஃப்.எம்களில் ஒளிபரப்பட்ட பாடல் என்றும் தகவல்கள் வெளியானது.

தற்போது ஜி.வி.பிரகாஷ் – ஆதிக் ரவிசந்திரன் கூட்டணி மீண்டும் இணைந்து படம் பண்ணத் திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்தை சீஸ் கார்னர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

இப்படத்துக்கு ‘விர்ஜின் மாப்ள’ என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top