வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

முரட்டு வில்லன் இயக்கத்தில் ஜிவி.. பாலிவுட்டில் அறிமுகமாகும் இசையமைப்பாளர்

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்த அமரன் படம் blockbuster ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகிவரும் ஜிவி சினிமாவில் ஹீரோவாக நடிக்க நேரமில்லாமல் இருக்கிறார். மேலும் ஹீரோவாக நடிக்கும் படங்கள் பெரும் வெற்றிப்படங்கலாக அமையாத காரணத்தினால், தற்போது இசையமைப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் மலேஷியாவில் நடந்த ஒரு concert-ல் சைந்தவி ஜிவி இணைந்து பாடியது ரசிகர்கள் மத்தியில் மீண்டும் இவர்கள் சேரமாட்டார்களா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அவர்கள், தங்களது வேலைகளை பார்த்து வருகின்றனர். ஜிவி அடுத்ததாக குட் பேட் அக்லீ படத்தில் கமிட் ஆகியுள்ளார். மேலும் கமல்ஹாசனின் அடுத்த படத்துக்கு ஜிவி தான் இசையமைக்கிறார்.

முரட்டு வில்லன் இயக்கத்தில் ஜிவி

இப்படி பிசியாக இருக்கும் ஜிவி விரைவில் பாலிவுட்டில் அறிமுகமாகவிருக்கிறார். மகாராஜா படத்தில் ஈவு இரக்கமில்லாத வில்லனாக நடித்தவர் அனுராக் காஷ்யப். பொதுவாகவே அவருக்கு தமிழ் படங்கள் மிகவும் பிடிக்கும். இங்கு உள்ள படங்களை தழுவி அவர் ஒரு சில படங்களை கூட இயக்கி இருக்கிறார்.

இந்த நிலையில், இவர் அடுத்ததாக ஒரு Gangster படம் எடுக்கவிருக்கிறார். அந்த படத்தில் ஹீரோவாக ஜிவி பிரகாஷ் குமார் நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகிறது.

கதை மட்டும் நன்றாக இருந்தால், ஜிவி-க்கு பாலிவுட்டில் அது மிகப்பெரிய ஓப்பனிங் ஆக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பொதுவாக நாம் இதுவரை, ஜிவி-யை ஒரு ரவுடியாக பெரிதாக பார்த்ததில்லை. இந்த நிலையில், இந்த படத்தில் இவர் நடிப்பு எப்படி இருக்கும், பாலிவுட்டில் இவருக்கு மார்க்கெட்டை இந்த படம் உயர்த்தி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Trending News