தமிழ்த் திரையுலகில் இப்போதுள்ள நடிகர்களில் டிவிட்டர் டிரென்டிங்கில் வந்தாலே போதும், நாம் வளர்ந்து விடலாம் என நினைப்பவர்களில் ஜி.வி.பிரகாஷ் முதன்மையானவர். விஜய்யை ஆதரித்தும், அஜித் ரசிகர்களை வம்பிக்கிழுத்தும் அடிக்கடி டிவிட்டரில் தான் இருப்பதை பதிவு செய்து கொண்டேயிருப்பார். எதைப் பற்றி சொல்வதென்றாலும் அதை முதலில் டிவிட்டரில்தான் சொல்ல வேண்டும் என நினைப்பவர். அப்படிப்பட்டவர் ‘புரூஸ் லீ’ படம் தள்ளிப் போனதைப் பற்றி இதுவரை தன்னுடைய டிவிட்டரில் எந்த ஒரு பதிவையும் போடாமல் அமைதி காக்கிறார். ஏற்கெனவே, கடந்த ஆண்டில் தன்னுடைய படங்கள் சரியாகப் போகாததால் பொங்கலுக்கு வெளிவரும் ‘புரூஸ் லீ’ படம் தன்னைக் காப்பாற்றிவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

அதோடு, ‘அண்ணா உங்களோட வர்றோம்’ என ‘பைரவா’ படத்துடன் ‘புரூஸ் லீ’ படம் வெளிவருவதை விஜய்யின் பெயரை வைத்து விளம்பரம் தேடி வந்தார். ‘பைரவா’ படத்திற்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் எப்படியாவது தன் படத்தை வந்து பார்த்துவிடுவார்கள் என்று கனவு கண்டு கொண்டிருந்த ஜி.விக்கு படம் வெளிவரவில்லை என்றதும் கோபம் வந்துவிட்டதாம்.

தயாரிப்பாளர்களிடம் சண்டை போட்டுவிட்டு அந்தப் படம் தள்ளிப் போனதைப் பற்றிக் கூட தன் டிவிட்டரில் எதுவும் போடாமல் விட்டுவிட்டார் என்கிறார்கள். ‘புரூஸ் லீ’ ன்னு பெயர் வைத்துவிட்டு ஒரு சண்டை கூட வரவில்லை என்றால் எப்படி?.