Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஹீரோ, இயக்குனருடன் நான்காவது, தயாரிப்பாளருடன் இரண்டாவது முறை, ஜி வி பிரகாஷ் 71 இன் ஷூட்டிங் எப்போ தொடங்குகிறது தெரியுமா ?
இன்றைய தேதியில்
தனுஷ் என்றால் நடிகர் என்பதனை தாண்டி தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல அடைமொழிகளை பெற்றுவிட்டார். அதேபோல தான் ஜி வி பிரகாஷ் குமாரும் இசைஅமைப்பாளர் என்பதனை தாண்டி ஹீரோவாக களம் இறங்கிவிட்டார். அதே நிலையில் தான் வெற்றிமாறனும் இயக்குனர், தயாரிப்பாளர் என பிஸி ஆகி உள்ளார்.
அசுரன்
தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை தொடர்ந்து உருவாகும் அடுத்த படம். “வெக்கை” என்ற நாவலின் தழுவல் . இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஜனவரி 26 தொடங்குகிறது என ட்விட்டரில் தனுஷ் அறிவித்துள்ளார்.
We will start filming #asuran from January 26th !! A Vetrimaaran film. Looking forward to yet another adventure. @VetriMaaran @gvprakash @theVcreations
— Dhanush (@dhanushkraja) January 21, 2019
அதே போல் ஜி வி பிரகாஷும் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
#GV71 After the classic #aadukalam , #mayakkamenna , #polladhavan , #visaaranai and #theri joining hands for #Asuran with @dhanushkraja (4th time ) @VetriMaaran (4th time ) @theVcreations ( second time ) #asuran this will be #GV71
— G.V.Prakash Kumar (@gvprakash) January 21, 2019
