சமூக வலைத்தளத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஒருவர் எழுதிய கதையைத் திருடி பாகுபலி 2 திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

பிரபல கேள்வி-பதில் சமூக வலைத்தளமான quora.com ல் சுஷாந்த் தாஹல் என்பவர் பாகுபலி 2 திரைப்படத்திற்கான கதையை வார்த்தைக்கு வார்த்தை துல்லியமாக எழுதியுள்ளார். அதுவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் பாகுபலி படத்தின் முதல் பாகம் வெளியான போதே இந்த பதிவை எழுதியுள்ளார்.

அதிகம் படித்தவை:  அப்போ விஜய்..இப்போ ரஜினி - கலக்கும் அருண்ராஜ் காமராஜ்

2015ஆம் ஆண்டு வெளியான பாகுபலி முதல் பாகத்தின் முடிவில் பாகுபலியை கட்டப்பா கொல்லும் காட்சி இடம்பெற்றது. இதனால், கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? என்ற புதிரான கேள்வி எழுந்தது. இரண்டு ஆண்டுகளாக வெவ்வேறு விதமான கணிப்புகளை ஏராளமானவர்கள் கூறிவந்தனர்.

இதனிடையே, சுஷாந்த் தாஹல் என்பவர் quora.com தளத்தில் ‘Why did Katappa kill Bahubali?’ என்ற கேள்வியின் பதிலாக பாகுபலி 2 படத்தின் கதையை புட்டுபுட்டு வைத்திருக்கிறார். 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதியே அவர் இதனை எழுதியுள்ளார். இப்பதிவை லட்சக்கணக்கானவர்கள் பார்வையிட்டுள்ளனர். இதனால், பாகுபலி 2 படத்தை எஸ்.எஸ்.ராஜமௌலி இந்த பதிவிலிருந்து சுட்டுவிட்டார் என்று நெட்டிசன்கள் கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், பாகுபலி 2 படத்தின் கதையை அன்றே சரியாகக் கணித்த சுஷாந்த் அமைதியாக இருக்கிறார்.