முழு பூசணிக்காவை சோற்றில் வைத்து மறைக்கும் பிக் பாஸ்.. அர்ச்சனாவை வாய் அடைக்க வைக்கும் குருநாதர்

Bigg Boss Season 7: தற்போது சமூக வலைதளங்களில் ரொம்பவே சர்ச்சையாக வெடித்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் என்றால் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தது தான். அதுவும் சூழ்ச்சி வலையில் சிக்கப்பட்டு பிளான் பண்ணி அவரை அவமானப்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு உடந்தையாக இருந்து நியாயமான தீர்ப்பை கொடுக்கத் தவறிய கமலிடம் நெட்டிசன்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் பல கேள்விகளை முன்வைத்து வருகிறார்கள்.

அத்துடன் மாயா கேங் தேவை இல்லாமல் பிரதீப்பை மாட்டி விட்டார்கள் என்று அர்ச்சனா மற்றும் விசித்திரா பிக் பாஸ் வீட்டுக்குள் போராடிக் கொண்டு வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் மாயாவிற்கு எதிராக நியாயமான ஒவ்வொரு கேள்வியையும் கேட்டு வருகிறார்கள். இதனை ஜீரணிக்க முடியாத மாயா கேங் அர்ச்சனா மற்றும் விசித்ராவை டார்கெட் செய்து வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து இவர்களுக்கும் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று மாயா பிக் பாஸிடம் அர்ச்சனா, விசித்ரா மற்றும் தினேஷ் இருந்தால் நான் இதில் விளையாட மாட்டேன். அதனால் தயவு செய்து அவர்களை வெளியே கூப்பிட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார். என்னமோ பிக் பாஸ் குருநாதர் இவருடைய மாமா மச்சான் போல டீலிங் வைத்துக் கொள்கிறார்.

Also read: பெண் கலாச்சாரத்தை சீரழிக்கும் பிக்பாஸ் வீடு.. விஜய் டிவி டிஆர்பிக்காக ஒத்து ஊதும் கமலின் மறுபக்கம்

இவர்களுடைய வேலையை ஒவ்வொருவருடைய இமேஜையும் கெடுத்து கெட்ட பெயரை உண்டாக்கி அதன் மூலம் குளிர் காய வேண்டும் என்பதுதான். அடுத்ததாக அர்ச்சனா பிரதிப்பை பற்றி ஏதாவது பேச ஆரம்பித்தாலே பிக் பாஸ் இந்த டாபிக்கை எடுக்க விடாமல் அர்ச்சனா வாயை அடைத்து விடுகிறார். இதை உன்னிப்பாக கவனித்த அர்ச்சனா நேரடியாக கேமரா முன் என்ன பிக் பாஸ் நான் பிரதீப்பை பற்றி பேசக்கூடாதா.

அவர் பெயர் எடுத்தாலே என்ன டைவர்ட் பண்ணுகிறீர்கள் என்று கேட்டு விடுகிறார். அதற்கு காரணம் வருகிற சனிக்கிழமை எபிசோடில் மறுபடியும் பிரதீப் பிரச்சினையை பற்றி கமல் பேசக்கூடாது என்பதற்காக குருநாதர் இந்த மாதிரி ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுகிறார். அதாவது முழு பூசணிக்காவே சோத்துல மறைப்பாங்களா அதுதான் தற்போது பிக் பாஸ் குருநாதர் செஞ்சு வருகிறார்.

ஏனென்றால் ஏற்கனவே பிரதீப் விஷயத்தில் கமல் பெயர் டேமேஜ் ஆகி கொண்டு வருகிறது. அந்த வகையில் மறுபடியும் இவர்களை பேச வைத்துக் கொண்டால் மீதம் இருக்கிற மானமும் போய்விடும் என்பதால் பிளான் பண்ணி பிக் பாஸ் காய் நகர்த்தி வருகிறது. எது எப்படியோ இந்த வாரமாவது அட்லீஸ்ட் கமல், மாயாவை ரோஸ்ட் பண்ண வேண்டும் என்பதுதான் மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் கமல் என்ன செய்யப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: மாட்டிக்கிட்டே பங்கு இந்த அவமானம் தேவையா.! நிக்சனின் கேவலமான புத்தியை குறும்படம் போட்ட பிக்பாஸ்