ஜிகர்தண்டா படத்தில் நடிப்பு சொல்லி கொடுப்பவராக நடித்து ரசிகர் மனதில் இடம் பிடித்து, சமீபத்தில் வெளிவந்த ஜோக்கர் படத்தில் தன் எதார்த்த நடிப்பால் கலக்கியிருப்பவர் குரு சோமசுந்தரம்.

இவர் அடுத்து வில்லன் அவதாரம் எடுக்கவுள்ளதாக தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. கிருஷ்ணா மற்றும் ஸ்வாதி நடிக்கும் ‘யாக்கை’ படத்தில் தான் அவர் வில்லனாக நடிக்கவுள்ளார்.

நடிப்பு என்றால் எந்த ஒரு எல்லைக்கும் சென்று நடிக்க விரும்பும் அவரை இந்தப் படம் புதிய பரிமாணத்தில் காட்டும் என்கிறார் இப்படத்தின் இயக்குனர் குழந்தை வேலப்பன்