எழுத்தாளர் ராஜு முருகன். இவருடைய படைப்புகளான வட்டியும், முதலும், ஒன்று, ஜிப்ஸி போன்றவை ஆனந்த விகடன் இதழில் வெளியிடப்பட்டவையாகும்.தமிழ் சினிமாவில் ‘குக்கூ’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜு முருகன். இதனையடுத்து குரு சோமசுந்தரத்தின் ‘ஜோக்கர்’ படத்தை இயக்கினார். ‘ஜோக்கர்’ சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றார். அடுத்து கார்த்தியின் ‘தோழா’ படத்திற்கு வசனம் எழுதினார்.

Guru Somasundaram
Guru Somasundaram

ஜோக்கர் படத்தை நாம் இன்றைய அரசியல் கால கட்டத்தில் மறக்க முடியாது. நடக்கும் அக்கிரமங்களுக்கு அன்றே சாட்டையடி கொடுத்தது போல இப்படம் அமைந்தது.இதில் நடித்த ஹீரோ குரு சோமசுந்தரம் மிகுந்த அளவில் பேசப்பட்டார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் குறித்த நேரத்தில் வெளியிடுவதை தடுக்க அரசியல் சூழ்ச்சியும் நடந்தது.

Guru Somasundaram
Guru Somasundaram

அடுத்து இவர் ஹீரோவாக  ‘வஞ்சகர் உலகம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ஒரு கொடூர கேங்ஸ்டர் லீடராகவும், வில்லனாகவும் நடித்துள்ளாராம்.இவர் இதற்க்கு முன் நடித்த ‘ஜோக்கர்’ படத்துக்கும் இந்த படத்துக்கும் பெரிய மாற்றங்கள் உள்ளன,  இவர் காதல், கேங்ஸ்டர், திரில்லர் என மூன்றும் கலந்த கலவையாக படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குனர் விநாயக். இவர் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

Guru Somasundaram
Guru Somasundaram

ஹாலிவுட்டில் பணியாற்றிய மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த ஹாலிவுட் பட ஒளிப்பதிவாளர் ராட்ரிகோ இதில் பணியாற்றுகிறாராம். ஒரு குறிப்பிட்ட 5-6 நிமிட கட்சியை ஒரே டேக்கில் ஓகே செய்து எல்லோரையும் மிரளவைத்தார்.

Guru Somasundara
Guru Somasundara

இதை எதிர்பாராத படக்குழு அவரின் நடிப்பை பார்த்து ஆச்சர்யப்பட அவருக்காகவே கதை சில மாற்றங்கள் செய்து படத்தை எடுத்திருக்கிறார்களாம். இது தமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுனையாக அமையும்  என கூறுகிறார்கள்.