Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

4 வார்த்தை, 8 நொடி- வைரலாகுது குரு சோமசுந்தரத்தின் வஞ்சகர் உலகம்

Guru Somasundaram

குரு சோமசுந்தரம்- ஆரம்பத்தில் கூத்துப்பட்டறையில் இணைந்து நாடகங்களை உருவாக்கி வந்தவர். இயக்குனர் தியாகராஜா குமாரராஜாவின் ஆரண்ய காண்டம் திரைப்படம் மூலம் திரையுலகிற்குள் வந்தவர். அதன் பின் கடல், பாண்டிய நாடு மற்றும் பல படங்களில் நடித்துள்ளார். எனினும் ஜிகர்தண்டா மற்றும் ஜோக்கர் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

வஞ்சகர் உலகம்

அறிமுக இயக்குனர் மனோஜ் பீதா இப்படத்தை இயக்குகிறார். இவர் எஸ் பி ஜனநாதனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் . இப்படத்தின் கதையை எழுதியது விநாயக், இவர் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

கேங்ஸ்டர் வேடத்தில் குரு சோமசுந்தரம் இப்படத்தில் நடித்துள்ளார். காதல் திரில்லர் பட வகையறா. புதுமுகம் சிபி கதாநாயகனாகவும் , அனிஷா அம்ப்ரோஸ் மற்றும் சாந்தினி தமிழரசன் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளார்கள். ஆண்டனி எடிட்டிங், ரொட்ரிகோ ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில் கொடூர கேங்ஸ்டர் பேசும் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. “விளம்பரம் கேக்குது நாய்க்கு – பாடு” இது தான் வசனம். வெறும் 8 நொடி ப்ரோமோ.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top