ஜீவானந்தத்திற்கு எதிராக நிற்கப்போகும் குணசேகரனின் மனைவி.. அப்பத்தாவின் உயிரை காப்பாற்றும் பெருசு

ethirneechal
ethirneechal

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் வரவர மாமியார் கழுதை போல ஆனாளாம். என்று சொல்வதற்கு ஏற்ப கதையே இல்லாமல் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு வருகிறார்கள். கிட்டத்தட்ட திருவிழா நிகழ்ச்சியை பல நாட்களாக வைத்து உருட்டுகிறார்கள்.

இதுல ஏதாவது ஒரு ட்விஸ்ட் இருக்கும் என்று ஆர்வமாக பார்த்தால் ஒவ்வொரு நாளும் ஏமாற்றமாக தான் முடிகிறது. இப்பதான் இந்த நாடகத்தினுடைய லட்சணமே தெரிகிறது. அதாவது இதுவரை இந்த கதைக்கு முக்கியமான பில்லர் ஆக இருந்து தூக்கி விட்டது குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து தான். இவர் இல்லை என்றதும் கதையும் இல்லை வசனமும் மக்களிடம் எடுபடவில்லை.

அந்த அளவிற்கு மொத்தமும் சொதப்பிக்கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே சொதப்பியதால் கடந்த மாதங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் அடிபட்டுக் கொண்டு வந்தது. அதிலும் கடைசி வாரம் வெளியான டிஆர்பி ரேட்டிங் படி இந்த நாடகம் ஐந்தாவது இடத்திற்கு போய்விட்டது. இப்படியே போச்சுன்னா மொத்தமா இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.

Also read: சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த பாக்கியா.. வீட்டை விட்டு வெளியேறும் மருமகள்

அடுத்தபடியாக அப்பத்தா அவருடைய 40% சொத்துக்கு முடிவு கட்டும் வகையில் குணசேகரனுக்கு எதிராக ஏதோ ஒரு ஏற்பாடு பண்ணி இருக்கிறார். அத்துடன் ஜீவானந்தம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் குணசேகரன் மற்றும் கதிருக்கு முடிவு கட்டும் வகையில் பல ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதற்கிடையில் ஜீவானந்தம் செய்ய போகும் செயலால் வெண்பா எந்த அளவிலும் பாதிக்க கூடாது என்று ஈஸ்வரி நினைக்கிறார்.

அந்த வகையில் ஜீவானந்தம் செய்யப் போகும் செயலுக்கு தடையாக குணசேகரனின் மனைவி ஈஸ்வரி நிற்கப் போகிறார். இதற்கிடையில் கதிரை நம்பினால் பிரயோஜனம் இல்லை என்று குணசேகரன் யாருக்கும் தெரியாமல் வேறு ஒரு நபரை ஏற்பாடு பண்ணி அப்பத்தா மற்றும் ஜீவானந்தத்தை தீர்த்து கட்டுவதற்கு முடிவு பண்ணி இருக்கிறார்.

ஆனால் இவர்கள் ஒவ்வொருவரும் செய்த ஏற்பட்டால் கடைசியில் பலிகடாக சிக்கப் போவது குணசேகரின் அம்மா விஷாலாட்சி. ஏனென்றால் அப்பத்தா, ஜீவானந்தம், குணசேகரன் மற்றும் கதிர் இவர்கள் அனைவருமே மிக முக்கியமான கதாபாத்திரத்தில் இருப்பதால் அவர்களுக்கு எதுவும் நடக்கப் போவதில்லை. அந்த வகையில் தெரியாத்தனமாக மாட்டிக்கொள்ள போவது குணசேகரின் அம்மா விசாலாட்சி.

Also read: குணசேகரனை வாய் அடைக்க வைத்த அப்பத்தா.. பொறிவைத்து தூக்கப் போகும் ஜீவானந்தம்

Advertisement Amazon Prime Banner