Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், நாளுக்கு நாள் குணசேகரனின் அட்டூழியம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தர்ஷினியின் இந்த நிலைமைக்கு காரணம் நாம் தான் என்று தெரிந்தும், அதை பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லாமல் மொத்த பழியையும் ஈஸ்வரி மற்றும் ஜீவானந்தத்தின் மீது போட்டுவிட்டார்.
இதனைத் தொடர்ந்து தர்ஷினியை இப்படியே விட்டால் மாட்டிக் கொள்வோம் என்று குணசேகரன் தற்போது உமையாவிடம் சம்பந்தத்தை வைக்க முடிவு பண்ணி விட்டார். அதே மாதிரி உமையாவும் தர்ஷினியை கல்யாணம் பண்ணி விட்டால் எல்லா சொத்தும் நம் கைக்கு வந்து விடும் என்று பிளான் பண்ணி தர்ஷினியே மருமகளாக அடைய வேண்டும் என்று கட்டம் கட்டி விட்டார்.
இதற்கு இடையில் உமையாவின் மகன் சித்தாத்தும், ஜனனியின் தங்கை அஞ்சனாவும் காதலிக்கிறார்கள் என்ற விஷயம் அனைவருக்கும் தெரிந்து விட்டது. எங்கே இதனால் ஏதாவது குளறுபடி ஆகிவிடும் என்ற பயத்தில் உமையா, குணசேகரனிடம் சத்தியம் கேட்கிறார்.
குணசேகரனும் வறட்டு கௌரவம் தான் முக்கியம் என்று தர்ஷினியின் நிலைமை என்ன என்று கூட தெரியாமல் அந்த மீனாட்சி அம்மனை சாட்சியாக வைத்து உங்க மகன்தான் எனக்கு மருமகன் என்று சத்தியம் செய்து விட்டார். அது மட்டும் இல்லாமல் என்னுடைய அனைத்து சொத்துக்களும் உங்களுக்கு தான் என்று வாக்குறுதியும் கொடுத்துவிட்டார்.
வக்கிர புத்தியால் எஸ்கேப் ஆக நினைக்கும் குணசேகரன்
இங்கே தான் ஏதோ ஒரு விஷயம் இடிக்கிறது. அதாவது குணசேகரனை பொருத்தவரை மற்றவர்கள் சொத்தை எப்படி ஆட்டைய போட வேண்டும் என்று நினைக்கக் கூடியவர். அப்படிப்பட்டவர் எதற்காக இவருடைய சொத்துக்கள் அனைத்தையும் தாரவாத்து கொடுக்க முடிவெடுத்து இருக்கிறார் என்பதுதான் லாஜிக் இல்லாமல் இடிக்கிறது.
ஒருவேளை இப்படி கல்யாணம் நடந்து விட்டால் தர்ஷினி அவர்கள் கண்ட்ரோலுக்கு போய் விடுவார்கள். அதன் மூலம் நாம் ஈசியாக தப்பித்துக் கொள்ளலாம் என்று பிளான் பண்ணி குணசேகரன் காய் நகர்த்துவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதை தடுக்க வேண்டும் என்று ஈஸ்வரி, சாறுபாலா மூலம் ஜட்ஜிடம் பேசப்போகிறார்.
ஆனால் ஜட்ஜ், ஜீவானந்தம் வராமல் எந்த விஷயமும் முடிவுக்கு வராது என்று ஈஸ்வரி கேட்ட கஸ்டடியை கேன்சல் பண்ணாமல் மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து ஈஸ்வரின் அடுத்த கட்ட முயற்சி ஜீவானந்தத்தை கண்டுபிடித்து கூட்டு வரவேண்டும் என்பதுதான்.
ஆனால் குணசேகரன் இப்படி எல்லாம் அக்கிரமம் பண்றார் என்று தெரிந்தும் அந்த வீட்டில் உள்ள மருமகள்கள், ஞானம் மற்றும் கதிர் போன்ற அனைவரும் சோளக்காட்டு பொம்மையாக வேடிக்கை பார்ப்பது தான் இந்த நாடகத்தை வெறுக்கும் அளவிற்கு எரிச்சலாக அமைந்து வருகிறது.
தயவு செய்து தர்ஷினி கல்யாண விஷயத்திலேயாவது அந்த வீட்டில் உள்ள பெண்கள் ஜெயிக்கிற மாதிரி காட்சிகள் அமைந்தால் ஓரளவுக்கு நன்றாக இருக்கும் என்று மக்கள் ஆதங்கத்துடன் கமெண்ட்ஸ்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.