தம்பிக்கு பாசத்தைக் காட்டி தூபம் போடும் குணசேகரன்.. சக்தியை போல் ரெமோவாக மாறிவரும் கதிர்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் இதற்குத்தானே ஆசைப்பட்டோம் மக்களே என்பதற்கேற்ப கதிரின் இந்த ஒரு சின்ன மாற்றம் பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. இதுவரை கட்டின பொண்டாட்டி நந்தினியை ஒரு மனுசியாக கூட மதிக்காத கதிர் தற்போது முதல் முறையாக அண்ணன் குணசேகரன் ஒரு வார்த்தை தவறாக பேசியதும் கண்ணில் கோபத்துடன் கொந்தளித்து பேசியது பார்க்கவே சுவாரசியமாக இருந்தது.

ஆனால் இதை கெடுத்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் ஜான்சி ராணி எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் குணசேகரனிடம் தூபம் போட ஆரம்பிக்கிறார். ஆனால் கதிர், ஜான்சிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நான் என் அண்ணனை தவறாக எதுவும் பேசவில்லை. என் மனைவியை பற்றி தவறாக பேசக்கூடாது என்று தான் சொன்னேன் என்று ஜான்சியின் வாய அடைக்கிறார்.

அடுத்தபடியாக குணசேகரன் இந்த ஒரு விஷயத்தால் கதிர் எங்கே மாறி விடுவானோ என்ற பயத்தில் அவனிடம் போய் பாசத்தைக் காட்டி தூபம் போடும் விதமாக பழைய குப்பை கதைகளை பேசி கதிரின் மனசை மாற்ற பார்க்கிறார். போதாக்குறைக்கு இந்த ஜான்சியும் குணசேகரனுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக ஜால்ரா அடிக்கிறார்.

Also read: பாக்யாவை மட்டம் தட்டின கோபியின் நிலைமை பரிதாபம்.. ஒரு முடிவுக்கு வந்த பாக்கியலட்சுமி சீரியல்

ஆனாலும் கதிர் இந்த ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறார். அதாவது அண்ணன் தான் எனக்கு முக்கியம். அதே நேரத்தில் என் மனைவி பிள்ளைகளுடைய கௌரவம் அன்பு எனக்கு வேண்டும் என்று தெளிவாக புரிந்து கொண்டார். இதுதான் இவருடைய மாற்றத்திற்கு ஏற்பட்ட ஒரு சின்ன படிக்கற்கள். இப்படித்தான் சக்தியும் கொஞ்சம் கொஞ்சமாக ஜனனி மீது பாசத்தை வைக்க ஆரம்பித்தார்.

தற்போது ஜனனிதான் எல்லாமே என்று மாறவில்லையா, அதுபோலவே கூடிய விரைவில் கதிரும் நந்தினி மீது காதல் செய்யும் ரெமோவாக மாறிவிட வாய்ப்பு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து குணசேகரன் அவருடைய மாமாவை கூப்பிட்டு வருகிற எலெக்ஷனில் யார் ஜெயிப்பார் என்று கணித்துப் பார்க்க சொல்கிறார். அவர் பட்டும் படாதபடி நல்லவர்களுக்கு கண்டிப்பாக வெற்றி நிச்சயம் என்று சொல்கிறார்.

இவர் சொல்வதை பார்க்கும் பொழுது கண்டிப்பாக குணசேகரன் எலக்ஷனில் தோற்றுப் போய் நிற்கப் போகிறார். அத்துடன் ஈஸ்வரிக்கு கிடைத்த முதல் வெற்றியாக ஜெயித்து அடுத்தடுத்து முன்னேறுவதற்கு ஒரு பாதை அமையப் போகிறது. இதனைத் தொடர்ந்து இன்னும் இந்த நாடகம் சுவாரசியமாக மாறுவதற்கும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிப்பதற்கும் கதிர் மட்டும் மனசு மாறி நந்தினி தான் எல்லாமே என்று நினைத்து குணசேகரனை எதிர்க்க ஆரம்பித்து விட்டால் எதிர்நீச்சல் சீரியலை அடிச்சுக்க வேற எந்த சீரியலாலும் முடியாது.

Also read: இதை தான் எதிர்பார்த்தோம் மனசை குளிர வைத்த கதிர்.. குணசேகரன் மூஞ்சியில் கரியை பூசிய ஆசை தம்பி

- Advertisement -spot_img

Trending News