புதன்கிழமை, பிப்ரவரி 19, 2025

எதிர்நீச்சல் சீரியலில் ஜெயிலில் இருந்து வெளியே வர போகும் குணசேகரன்.. ஜனனி வைத்த டுவிஸ்ட், கதறப்போகும் கதிர்

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், நான்கு மருமகளும் இருக்கும் வரை குணசேகரன் ஜெயிலிலிருந்து வெளியே வர முடியாது என்று கதிர் தெனாவட்டாக எல்லா சொத்துக்களையும் ஆட்டைய போட்டு விட்டார். ஆனால் ஜெயிலுக்குள் இருக்கும் குணசேகரன் தம்பி மீது அதீத நம்பிக்கை வைத்து நாம் திரும்பி வந்ததும் சொத்துக்கள் அனைத்தையும் தன்னிடம் ஒப்படைத்து விடுவார்.

அத்துடன் நம்மலையும் வெளியே கூட்டிட்டு வர முயற்சி எடுப்பார் என்ற நம்பிக்கையில் ஜெயிலுக்குள் குணசேகரன் இருக்கிறார். ஆனால் எல்லாமே சும்மா கண்கட்டி வித்தை தான் என்பதற்கு ஏற்ப கதிர் டிராமா பண்ணி வருகிறார். கதிர் ட்ராமாவை புரிந்து கொண்ட ஜனனி, கதிரின் ஆசைக்கு ஒட்டுமொத்தமாக ஆப்பு வைக்கும் விதமாக பிளான் பண்ணி விட்டார்.

அந்த வகையில் குணசேகரனை ஜாமினில் வெளியே எடுப்பதற்காக போஸ்டர் பெரியசாமி ஒரு பெரிய லாயரை கதிருக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார். அந்த லாயரை கதிர் வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார். வந்ததும் நான்கு பெண்களிடமும் பேசி பார்க்கிறார். அப்பொழுது ஜனனி, குணசேகரன் வெளியே வருவதற்கு எங்களுக்கு எந்தவித ஆட்சேப்பனையும் இல்லை.

நீங்கள் அவரை வெளியே கொண்டு வருவதற்கு என்னென்ன செய்யணுமோ அதை செய்யுங்க என்று சொல்லிவிடுகிறார். இதை எதிர்பார்க்காத கதிர் அதிர்ச்சியாகி விடுகிறார். திரும்பவும் கலர் வேட்டி சட்டைக்கு மாறிடனும் போல என்ற பயத்தில் கதிர் இருக்கிறார். ஏனென்றால் குணசேகரன் வந்துவிட்டால் அவருடைய சொத்துக்களை திரும்ப கொடுத்து விட வேண்டும்.

நம்முடைய தில்லாலங்கடி வேலையும் தெரிந்துவிடும் என்பதால் கதிர் பயப்பட ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் இனி நான்கு பெண்களும் குணசேகரன் வெளியே வருவதற்கு ஆட்சேபனை தெரிவிக்காத வகையில் கூடிய சீக்கிரத்தில் குணசேகரன் வெளியே வந்து விடுவார். அவர் வந்ததும் தர்ஷன் கல்யாணத்தை பண்ணுவதற்கு பிடிவாதமாக இருந்தாலும் அதை நிறுத்துவதற்கு நான்கு பெண்களும் போராடுவார்கள்.

ஆனாலும் கதிரின் கொட்டத்தை அடக்குவதற்கு குணசேகரன் வெளியே வந்தால் தான் சாத்தியமாகும் என்பதால் ஜனனி இந்த முடிவை எடுத்திருக்கிறார். இன்னும் கூடிய விரைவில் குணசேகரனை ஜனனி களத்தில் சந்திக்க தயாராகி விட்டார். சொத்து நம்மிடம் வந்துவிட்டது, இனி நாம் தான் அடுத்த குணசேகரன் என்று ஓவராக ஆட்டம் போட்ட கதிர் இனி ஒவ்வொரு நாளும் கதற போகிறார்.

Trending News