புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

மீண்டும் ரஜினி VS கமல்.. பந்தயத்தில் முத்தப்போவது யார்?

கடந்த 1991-ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் குணா படம் வெளியானது. இந்த படத்துக்கு போட்டியாக நடிகர் ரஜினிகாந்த மம்முட்டி இணைந்து நடித்த தளபதி படமும் வெளியானது. ஆனால் தளபதி கொடுத்த Commercial ஹிட்டை குணா படத்தால் கொடுக்க முடியவில்லை. ஒரு சிறந்த காதல் கதையாக இருந்தும் கூட, அந்த காலகட்டத்தில் படத்திற்கு போதுமான வரவேற்பு இல்லை. இருப்பினும் பாடல்கள் எல்லாம் வேற லெவல் ஹிட் அடித்தது.

இந்த நிலையில், இந்த படம் மீண்டும் மக்கள் நினைவில் வர காரணமாக இருந்தது மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் படம். படம் 100 கோடியை தாண்டி வசூல் செய்ய முக்கியமான காரணமாக இருந்தது குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு பாடல். இது தமிழ் ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்தது. அப்போது மீண்டும் மக்கள், குணா படத்தை ரி ரிலீஸ் செய்ய சொல்லி நச்சரிக்க ஆரம்பித்தனர்

மீண்டும் குணா Vs தளபதி

இப்படி இருக்க, வரும் நவம்பர் 29 அன்று குணா படத்தை ரி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறது தயாரிப்பு நிறுவனம். இந்த முறை கண்டிப்பாக ப்ளாக்பஸ்டர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த நிலையில், குணா படம் நவம்பர் 29 ரிலீஸ் ஆகவிருக்கும் நிலையில், டிசம்பர் 12 சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது கேரியரில் முக்கியமான படம் ஒன்றும் வெளியாகிறது.

1991-ஆம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கேரளா சூப்பர்ஸ்டார் மம்முட்டி இணைந்து நடித்த தளபதி படம் ரி ரிலீஸ் ஆகவிருக்கிறது. ஆகையால் இந்த இரண்டு படமும் கிட்டத்தட்ட, 23 வருடங்கள் கழித்து மீண்டும் மோத உள்ளது. நேரடியாக மோதவிட்டாலும், கண்டிப்பாக இரண்டு படங்களும் வெவ்வேறு தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கும்.

இது நிச்சயமாக 80-ஸ் vibe-ஐ கொடுக்கும். முன்பை போல, ரஜினி ரசிகர்களும் கமல் ரசிகர்களும், பந்தயத்தில் யார் முந்துவார்கள் என்று மிகுந்த எதிர்பார்ப்போடு இருப்பார்கள். மேலும் ரி-ரிலீஸில் இந்த படங்கள் ஒரு புதிய Revolution-ஐ உருவாக்குமா என்ற கேள்வியும் உருவாகி இருக்கிறது.

- Advertisement -

Trending News