Connect with us
Cinemapettai

Cinemapettai

குலேபகாவலி திரை விமர்சனம் !

Reviews | விமர்சனங்கள்

குலேபகாவலி திரை விமர்சனம் !

குலேபகாவலி 1955-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்து வெற்றிநடை போட்ட திரைப்படம். பழ பட தலைப்பை புது படத்துக்கு வைப்பது தான் லேட்டஸ்ட் ட்ரெண்ட். அந்த வகையில் தலைப்பை மட்டும் எடுக்காமல், படத்தின் ஜானரையும் அப்படியே வைத்துள்ளார். எம்.ஜி.ஆர் தன் தந்தையின் உயிரை காக்க மலரை தேடி செல்வார், இங்கு ஒரு புதையலை தேடி எடுக்க ஸ்கெட்ச் போட்டுக்கொண்டு ஒரு தானா சேர்ந்த கூட்டம் செல்கிறது.

gulebhagavali

கதை

பிளாக் & வைட் காலத்தில் வேலைக்கார துறையிடம் ஏமாற்றி வைரங்களை திருடும் ஒரு நம்பர் அதை கோயிலில் புதைத்து வைக்கிறார்.  இரண்டு தலை முறை கழித்து அதை எடுக்க மெக்ஸிகோவில் இருந்து இந்திய வரும் அவர் பேரன் அதை எடுத்தாரா இல்லையா? அதில் புதையல் இருந்ததா ? என்பது தான் மீதி கதை.

Gulaebaghavali

மன்சூர் அலிகானுடன், யோகி பாபுவுடன் டீம் சேர்ந்து சிலை திருடும் பிரபுதேவா. பார் டான்சர், கூடவே கிளப்பில் போதையாக இருப்பவர்களிடம் திருடும் ஹன்சிகா. ஆனந்தராஜ் என்ற டான் இடம் விஷுவசமான அடியாளாக நம்ம முனீஸ்ஷ்காந்த். சோலோ ஆண்ட்டியாக நடித்து கார் திருடும் நம் ரேவதி. இவர்கள் நால்வரும் ஒரு டீமாக செயல் பட்டு புதையலை எடுக்கும் நிலை ஏற்படுகிறது.

இந்த நால்வரிடமும் வெவ்வேறு சந்தர்ப்பத்தில் ஏமாறும் சத்யன். இவர்களை பழிவாங்க துடிக்கிறார். மன்சூரலிகான் அவர் காங், ஆனந்தராஜ்  & டீம். இதுமட்டுமல்லாது அண்ணாச்சியாக மொட்டை ராஜேந்திரன் அவர் தன் கூட்டாளிகளுடன் என்று படத்தில் நகைச்சுவை நடிகர்கள் மற்றும் நகைச்சுவைக்கு பஞ்சமே கிடையாது.

Prabhu Deva

Prabhu Deva

லாஜிக் போன்ற விஷயங்களை தூக்கி வைத்துவிட்டு சிரித்து மகிழ ஏற்ற படம்.

பிளஸ்

திரைக்கதை, வசனம்,  நகைச்சுவை, ரேவதி

மைனஸ்

தேவையில்லாத பாடல்கள், ஹனிஸ்காவின் அதீத கவர்ச்சி

இயக்குனர் கல்யாண்,  “கதை சொல்ல போறோம்” படத்தினை தொடர்ந்து எடுக்கும் இரண்டாவது படம். மனிதர் கலக்கியுள்ளார். கதாபாத்திரங்களின் தேர்வு அருமை.    காமெடி படங்கள் எடுப்பதில் தனக்கென்று தனி முத்திரை கட்டாயம் பதிப்பர் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

arangetravelai

ரேவதி இவரின் பெயர் மாஷா. அட ஆமாங்க அரங்கேற்ற வேலை படத்தில் அழிச்சாட்டியம் செய்வாரே அவரே தான். அந்த மாஷா ரோலில் தான் இப்படத்தில் வருகிறார். படத்தில் செம்ம நடிப்பு. பத்து வருடத்திற்கு முந்தய பிரபு தேவாவை கண் முன்னே பார்க்க முடிகிறது. அதே பென்சில் தோற்றம், டயமிங் காமெடி என்று தாறுமாறு செய்துவிட்டார். விவேக் மேர்வின் தான் இசையமைப்பாளர்கள். பின்னணி இசையில் சில இடங்களில் சொதப்பிவிட்டனர். படத்தொகுப்பும் சுமார் வகையறா தான்.

சினிமா பேட்டை ரேட்டிங்  3.25 / 5

ஆக மொத்தத்தில் இந்த குலேபகாவலி, வாய் விட்டு சிரிக்க நல்ல வழி !

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top